Breaking News

விண்ணப்பித்துவிட்டீர்களா...? தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி


தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும், பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பழகுனர் பயிற்சி (ஐடிஐ) பெற்று முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் முடித்தவர்கள் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



அறிவிப்பு எண்.01/2016 
 தேதி: 28.02.2016
அறிவிப்பு எண்.02/2016
தேதி: 29.02.2016
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 500
பணி: தொழில்நுட்ப உதவியாளர், இயந்திரவியல் - 25
பணி: உதவி வரைவாளர் - 50
பணி: கள உதவியாளர் (பயிற்சி) - 900
பணி: சோதகர் வேதியர் - 100
பணி: இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) - 100
பணி: இளநிலை உதவியாளர் (கணக்கு) - 250
பணி: இளநிலை தணிக்கையாளர் - 900
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் - 25
பணி: தட்டச்சர் - 200


வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். 01.07.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.



தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, வேதியியல் துறையில் பி.ஏ., பி,எஸ்சி, பி.காம், மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.



தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - 250



விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 02.03.2016


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2016


தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.03.2016


தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது (உத்தேசமாக). இதற்கான தேதி பின்னர் www.tangedco.directrecuitment.in  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.



மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.in என்ற இணையதளத்தைபார்க்கவும்