பழைய ஓய்வூதிய திட்டம் வல்லுனர் குழு அமைப்பு.
தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல், அரசுப் பணியில் சேர்ந்துள்ள, அரசு அலுவலர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்பட்ட, ஓய்வூதிய பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், அவற்றுக்கான வட்டித் தொகையும், அரசு கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்திட வேண்டும்' என, பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன.
'இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, வல்லுனர் குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், தக்க முடிவு எடுக்கப்படும்' என, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, பிப்.,19ல் அறிவித்தார்.அதன்படி, ஐந்து பேர் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.