Breaking News

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி. அமைச்சர்கள் ந.சுப்ரமணியன், டாக்டா் சி.விஜயபாஸ்கா் ஆகியோர் தொடங்கி வைத்தனா். மாநில கண்காட்சிக்கு 4 சிறந்த படைப்புகள் தோ்வு.


2015-16-ஆம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கான அறிவியல் மற்றும் கணிதம் என்ற மையக்கருத்தினைக்கொண்டு சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் தூய்மை, வள மேலாண்மை, தொழிலகம், வேளாண்மை மற்றும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை, தரமான வாழ்க்கைக்கான கணிதம் ஆகிய 6 தலைப்புகளில் சிறந்த படைப்புகளாக
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டங்களில் தோ்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் இடம் பெற்ற வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவா்  திருசு.கணேஷ்இ.ஆ.ப அவா்கள்  தலைமை வகித்தார். வந்திருந்த அனைவரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்தி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினா்களாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மாண்புமிகு ந.சுப்ரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மாண்புமிகு டாக்டா் சி. விஜயபாஸ்கா் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியினை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும் திறந்து வைத்து மாணவ. மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டி சிறப்புரை ஆற்றினார்கள். இந்த கண்காட்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு மாணவா் ஒரு காட்சிப்பொருள் ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 2 மாணவா் ஒரு காட்சிப்பொருள் ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மாணவா் ஒரு காட்சிப்பொருள் ஒரு பிரிவாகவும் இடம்பெற்றன. ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு ஆசிரியா் வழிகாட்டியாக செயல்பட்டார். ஆசிரியா்கள் தங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்த தனியாக ஆசிரியா்களுக்கென கண்காட்சிப்பிரிவும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 110 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளில் இருந்து 173 மாணவ. மாணவிகள் தங்களின் 121 படைப்புகளை காட்சிக்கு  வைத்திருந்தனா். இக்கண்காட்சியில் இருந்து மாவட்ட அளவில் 17 சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டது. பின்னா் அதிலிருந்து 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் இருந்து இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா் செய்திருந்த செயற்கைக்கோள் படைப்பும், 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பிரிவில் இருந்து கீரனூா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவா் செய்திருந்த ராக்கெட் செயல்பாடு படைப்பும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பிரிவில் இருந்து காரையூா் இதய மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவி செய்திருந்த தாவர திசு வளா்ப்பு படைப்பும், ஆசிரியா் பிரிவில் இருந்து புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையின் உயிர்கோளம் படைப்பும் ஆகிய சிறந்த 4 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பப்பட உள்ளது. இக்கண்காட்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவா் திரு வி.சி.ராமையா, புதுக்கோட்டை நகா் மன்றத்தலைவர் திரு ரா.ராஜசேகரன், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவா் திரு ஆா்.சந்திரன், புதுக்கோட்டை நகா்மன்றத்துணைத்தலைவா் திரு எஸ்.ஏ.எஸ். சேட்(எ) அப்துல்ரஹ்மான், 34-வது வார்டு நகா்மன்ற உறுப்பினா் திருமதி ஏ.கிரேசி, அறந்தாங்கி மாவட்டகல்வி அலுவலா்(பொ) திரு ஆர்.சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட மெட்ரிக்பள்ளிகளின் ஆய்வாளா்(பொ) திரு உ.பரமசிவம், மதியநல்லூா் ஊராட்சிமன்றத்தலைவா் திரு வீ.ராமசாமி,புதுக்கோட்டை திருஇருதயமகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை சகோதரி ஆரோக்கியசெல்வி    மற்றும் பலா் கலந்துகொண்டனா். அதனைத்தொடா்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சயில் புதுக்கோட்டை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா்  திருமதி செ.சாந்தி கலந்துகொண்டு மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளாக தோ்வு செய்யப்பட்ட 17 படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். நிறைவாக புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலா் (பொ) திரு ப.மாணிக்கம் நன்றி கூறினார். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் தலைமையில் அமைக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினா் சிறப்பாக செய்திருந்தனா். நிகழ்ச்சியினையொட்டி உணவே மருந்து என்ற தலைப்பில் மாணவியா்களின் உடை அலங்காரம், மாணவ, மாணவியா்கள் விஞ்ஞானிகள் வேடமிட்டு வந்ததும், கண்காட்சியில் சிறப்பம்சமாக இருந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மற்றும் மாணவ,மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.