Breaking News

அவசர கவுன்சிலிங்கால் காலியான 300 பணியிடங்கள்

தொடக்கக் கல்வித் துறையில் புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் 'அவசர கவுன்சிலிங்'மூலம் நிரப்பப்பட்டதால் 300 பணியிடங்கள் காலியாகஉள்ளன.தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 128 தொடக்கபள்ளிகள்,42 தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் புதியபணியிடங்களுக்கு பணிமாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான'கவுன்சிலிங்' ஜன., 31ல் நடந்தது.


  இதற்கான தகவல் முதல் நாள் இரவு தான் ஆசிரியர்களுக்குதெரிவிக்கப்பட்டதுஅடித்து பிடித்து கவுன்சிலிங்கில் பங்கேற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.புதிய தொடக்கப் பள்ளிகளில் ஒருதலைமையாசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கு பதில் பதவி உயர்வு மூலம்தலைமையாசிரியர்கள் மட்டும் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லைமேலும்தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவரின்பணியிடங்களும் காலியாக உள்ளனஇதன் மூலம் 256 காலிப்பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகளில் புதிதாக ஏற்பட்டன.

அதேபோல தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில்உருவாக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியதன் மூலம் பழையஇடங்களில் இருந்து பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் 42பணியிடங்களும் காலியாகி உள்ளனஇவற்றை நிரப்ப இதுவரைஎந்த வழிமுறைகளும் தொடக்க கல்வித் துறை சார்பில்தெரிவிக்கப்படவில்லைதிட்டமிடல் இன்றி நடந்த 'அவசரகவுன்சிலிங்மூலம் தேவையின்றி சுமார் 300 காலிப் பணியிடங்கள்ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள்கூறியதாவது:இப்பணியிடங்களுக்கு பொது 'கவுன்சிலிங்போல்முன்கூட்டி அறிவிப்பு செய்து நடத்தியிருந்தால் ஆசிரியர்கள் பயன்அடைந்திருப்பர்தற்போது ஏற்பட்டுள்ள 300 பணியிடங்களைஎவ்வாறு நிரப்பப்படும் என்பது 'சஸ்பென்ஸாகஉள்ளது என்றனர்