Breaking News

81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


தமிழகத்தில்கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களில்,81 சதவீதத்தினருக்கு அடிப்படைகணித திறன் இல்லை என்று ஆய்வுகளின் முடிவில்கண்டறியப்பட்டுள்ளது.

'ஏசர்அமைப்பின் சார்பில்தமிழகத்தில்ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரை படிக்கும்கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம்குறித்து ஆய்வு செய்யப்பட்டதுஇதன் படிதமிழ் பாடத்தைபொறுத்தவரையில்எழுத்துவார்த்தைவாக்கியம்பத்தி எனவாசிப்பு திறன் கொண்ட மாணவர்களை தனித்தனியாக ஆய்வுசெய்துள்ளனர்இதில்ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளமாணவர்களின், 64 சதவீத பேருக்கு தமிழ் வாசிப்பு திறனும், 71சதவீத மாணவர்களுக்கு ஆங்கில வாசிப்புத்திறனும் இல்லை என்பதுகண்டறியப்பட்டுள்ளதுமேலும்கணித பாடத்தில், 81 சதவீதமாணவர்களுக்கு எளிமையான வகுத்தல் கணக்குகளும், 75 சதவீதமாணவர்களுக்கு கழித்தலும்செய்வதற்கு தெரியவில்லை.
கல்வியாளர் பாரதி கூறுகையில், ''கிராமப்புற மாணவர்களின்அடிப்படை கல்வித்தரம் மிகவும் வேதனை அளிக்கும் வகையில்உள்ளதுமனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை மற்றும்ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கல்வித்தரத்தைபாதிக்கின்றதுஇப்பாதிப்புபொதுத்தேர்வுகளிலும்உயர்கல்விமற்றும் வேலைவாய்ப்பில் கிராமப்புற மாணவர்களை பின்னுக்குதள்ளுகிறது,'' என்றார்