இன்று (10.1.15) திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் குண்ட டம் ஒன்றிய கிளை துவக்க விழா நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் திரு.பேட்ரிக்ரெய்மாண்ட் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினர். அவர் தனது உரையில் இன்று கல்வித்துறையில் ஆசிரியர் மத்தியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமே
சங்கங்கள் செயல்பட முடியும். அவ்வகையில் 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தினை பணிக்காலமாக அரசு அறிவிக்க வேண்டும், cps யை ரத்து செய்து பழைய ஊதியத் திட்டத்தை ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும். இதனை நிரைவேற்ற வேண்டும் என நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திண்டுக்கல் , ஈரோடு, விழுப்புரம் போன்ற இடங்களில் உண்ணாவிரத அறப்போரட்டங்களை நடத்தியது. மீண்டும் அதே கோரிக்கை வலியுறுத்தி வரும் ஜனவரி 25 ஆம் தேதி திருச்சியில் மாநில அளவிலான உண்ணாவிரத அறப்போரட்டத்தை நடத்த உள்ளது.
மேலும் இவ்விரு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போரட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. என கூறினார். விழாவில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.