நண்பர்கள் இருவரும் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு சென்ற நிலையில், போதை தலைக்கேறிய அந்த மாணவன் திடீரென மயங்கி பேருந்து நிலையத்தின் அருகில் விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பட்டப்பகலில் பள்ளி சீருடையிலேயே மது அருந்தி மயங்கியிருந்த மாணவனை பொதுமக்கள் மாணவனை எழுப்பினர்.
இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததால் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மாணவன் மது அருந்தி இருப்பது கரூர் பெற்றோர்களிடையே மனகஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.