Breaking News

திருவள்ளுவரின் சிறப்பை விளக்கும் ஆன்லைன் கட்டுரை போட்டி: மத்திய அரசு அறிவிப்பு


திருவள்ளுவரின் சிறப்பை விளக்கும் ஆன்லைன் கட்டுரை போட்டி: மத்திய அரசு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் தமிழர் திருநாளையடுத்து திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் நூல்களின் சிறப்பை நாட்டில் உள்ள அனைத்துதரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் வகையில் ‘ஆன்லைன்’ கட்டுரை போட்டி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஈற்றடி வெண்பாக்களால் சுமார் இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் புகழினை தேசிய அளவில் நிலைநாட்டி,
தனிச்சிறப்பை பெற்றுத்தந்த தருண் விஜய் எம்.பி., திருவள்ளுவரை பற்றி ஒரு நூலினை இயற்றியுள்ளார்.இந்நூலின் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, ‘திருவள்ளுவரின் படைப்புகள் மற்றும் வாழ்க்கையை அனைவரும் அறிந்துக்கொள்ளும் வகையில் இம்மாதத்தில் திருவள்ளுவரை பற்றிய ‘ஆன்லைன்’ கட்டுரை போட்டி நடத்திடும்படி ‘சி.பி.எஸ்.சி’ பள்ளிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு பாடத்திட்டத்தில் (NCERT) திருவள்ளுவரை பற்றிய பாடம் இடம் பெறுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிருதி இரானி, புதிய தேசிய பாடத்திட்டக்கொள்கை உருவாக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.

திருவள்ளுவரை பற்றிய கட்டுரை போட்டிகள் 22 மொழிகளில் நடத்தப்படும். சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.