Breaking News

சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?- தவிற்க வழிமுறைகள்

ம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள். சித்த மருத்துவத்தில் இதனை அரச உறுப்பு என கூறுவார். உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை செய்வது சிருநீரகங்கலாகும். அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
சிறுநீர் கற்கள் என்றால் என்ன?

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (CRYSTALS) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது. நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பரம்பரையாக வருகிறது. சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும். முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம். ஒருவருக்கு, ஒருமுறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

சிறுநீர் கற்கள் அறிகுறிகள்

சிறுநீரகக் கல் மிகச்சிறிய துகள் அளவில் இருந்து மிகப்பெரியளவு அதாவது பிறந்த குழந்தையின் தலையளவு கூட வளரும். இவை சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, வெளியில் அறிகுறிகள் தென்படாது. சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் உள்வரிப்படலமான சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரும். கண்ணுக்குத் தெரியும் அளவில் சிறுநீர் ரத்த சிவப்பாக இருக்கும் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்யும் போது ரத்தச் சிவப்பணுக்கள் மிகுதியாகக் தென்படும். வயிற்று வலியோடு இந்த அறிகுறியும் இருந்தால் சிறுநீரக கல் உருவாகி உள்ளதை அறிந்து கொள்ளலாம்.    

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க

அதிகமான பழங்கள் , அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல். குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்னரும் தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய்,  உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சிறுநீர் கற்களுக்கான சிகிச்சைகள்

 அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும். வாழைத்தண்டு அல்லது மாற்று மருந்துகள் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகின்றன. வலி மிகுதியாக இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

வீட்டு வைத்தியம்

வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி, அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம். அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.

மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள். உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்

சிறுநீரக கற்கள் கரைய ஆரஞ்சு பழம்


ஆரஞ்சு பழம்

சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும்கோடைக்காலத்தில் தோன்றும்சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்துவெளியேற்றஏற்ற பழம் ஆரஞ்சுப்பழமாகும்.

100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி கிடைப்பதால்கோடைக்காலத்தில் சக்தி இழப்பை தடுக்க ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தலாம்.

ஆரஞ்சுப் பழத்தை தோல் நீக்கிபிழிந்துசாறெடுத்துசமஅளவு நீர் சேர்த்து 2 மணிநேரத்திற்கு ஒரு முறை என மூன்று நாட்கள் தினமும் காலை முதல் இரவு வரைஉட்கொண்டு வர சுண்ணாம்பு சத்து சேர்ந்த சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும்.இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைக்க இந்த முறைவலியுறுத்தப்படுகிறதுஆரஞ்சுப் பழச்சாறை உட்கொள்ளும் போது புரத உணவுகளைகுறைத்துக் கொள்ள வேண்டும்.

சுண்ணாம்பு சத்து சேர்ந்த கற்கள் சேரவிடாமல் தடுக்க சிட்ரேட் அதிகமுள்ள ஆரஞ்சுப்பழத்தை உட்கொள்வதால் சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு அதிகரித்துயூரிக் அமிலமற்றும் சுண்ணாம்பு கற்கள் தோன்றுவது தடுக்க படுகிறதுஆரஞ்சு பழத்திலுள்ளபொட்டாசியம் சிட்ரேட் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.

தையமின்ரிபோபுளோவின்நியாசின்பான்டோதெனிக் அமிலம்வைட்டமின் பி6,போலேட்அஸ்கார்பிக்அமிலம்கால்சியம்இரும்புமெக்னீசியம்பாஸ்பரஸ்,பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகமாககாணப்படுவதால் சற்று அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன