Breaking News

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதில் சேரும்போது முகப்பு (இண்

டக்ஸ்) எண் வழங்கப்படும்.தமிழ்நாடு தரவு மையத்தின் (டேட்டா செண்டர்) இணையதளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த எண்ணை ஊழியர்கள் பெற்றுள்ளார்களா என்பதை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம். 

உறுதி செய்யப்பட்டதை, கணக்குத் துறை மற்றும் கருவூல அதிகாரியிடம் இதை தெரிவிக்க வேண்டும்.முகப்பு எண் வழங்கப்படாமல் இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். என்றாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் முகப்பு எண் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு விண்ணப்பிப்பதற்கான பிப்ரவரி மாதம் வரையில் காலக்கெடு தற்போது நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.முகப்பு எண் பெறாத மற்றும் அதற்கு விண்ணப்பிக்காதவர்களின் சம்பள பட்டியல் பிப்ரவரி மாதம் வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, பிப்ரவரிக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.