Breaking News

சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள் இறந்த நிலையில் கோழிக் குஞ்சுகள்!

சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள், கோழிக் குஞ்சுகள் இறந்த நிலையில் கிடப்பதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில், நேற்று மறியல் போராட்டம் நடந்தது.



இதில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலர் குமார் அளித்த பேட்டி: மாநில அரசு, சத்துணவு ஊழியர்களை, கொத்தடிமைகள் போன்று நடத்துகிறது. சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள், அழுகிய நிலையில், காலாவதியானதாக உள்ளன.

முட்டைகளில், கோழிக் குஞ்சுகள் இறந்த நிலையில் கிடக்கின்றன. அவற்றை மண்ணில் போட்டு புதைக்கும் நிலை, அடிக்கடி ஏற்படுகிறது.

சத்துணவு துறையில், 25, 30 ஆண்டுகள் வரை பணி செய்து, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, வெறும், 1,000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது; இதை உயர்த்தி தர வேண்டும்.

மாநில அரசின், அட்சய பாத்திர திட்டம் தேவையற்றது. தற்போது, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் யாரும், காய்கறிகளை அட்சய பாத்திரத்தில் போட முன்வருவதில்லை. எனவே, காய்கறிகள் வழங்கும் செலவை அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.