Breaking News

பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் -தினகரன்


திண்டுக்கல், : பங்களிப்பு ஒய்வூதியத்தில் இருந்து விலக்களித்து பழைய ஓய்வூதியத்திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வேடசந்தூரில் பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப் பின் வட்டாரப் பொதுக்குழுக் கூட்டம்நடைபெற்றதுதலைவர் முருகேசன் தலைமை வகித்தார்செயலாளர் ஜெயக்குமார்,பொருளாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்மாவட்டத் தலைவர்திருநாவுக்கரசுசெயலாளர் ஜோசப்சேவியர்மாநில துணைத் தலைவர் பாபுமாவட்டஇணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்வேல்முருகன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.ஒன்றியத்தில் ஆசிரியர்களின் பணிப்பலன் மற்றும் பணப்பலன்களைப் பெறுவ தில்ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்அறிவியல் உதவித்தொடக்கக் கல்விஅறிவியல் பாடம் பயின்றவர்களையே நியமனம் செய்ய வேண்டும்பங்களிப்புஒய்வூதியத்தில் இருந்து விலக்களித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையேநடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிமூப்புஅடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளி ட்டபல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.மாநில பொதுச் செய லாளர் பேட்ரிக்ரெய்மா ண்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்