Breaking News

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10  சி.ஆர்.சி.,  நாட்களும் சேர்த்து 220  வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு Crc கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220 நாட்கள் செயல்பட்டது.



தற்போது முன்பு போல் சி.ஆர்.சி., கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர்.எனவே சி.ஆர்.சி., நாட்களை பள்ளி வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். புயல் மழைக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட தற்போது அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் சி.ஆர்.சி., நாட்களை பள்ளி வேலை நாட்களாக அறிவித்தால் உதவியாக இருக்கும். ஆசிரியர் சங்கங்கள் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய முயற்சி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தகவல்: திரு.நேசமணி