Breaking News

பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ்அணிந்து போராட்டம் நடத்தவுள்ளதாக ஆசிரியர்கள்அறிவித்துள்ளனர்.

மதுரையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர்இளங்கோவன் கூறியதாவதுசமீப காலமாக மாணவர்கள் மற்றும்வெளி
ஆட்களால் பள்ளி ஆசிரியர்கள் மீது தாக்கும் சம்பவங்கள்நடக்கின்றனஇதனால் ஆசிரியர்கள் மிகுந்த பயத்துடன் பணியாற்றவேண்டியுள்ளது.

இதுகுறித்து பல்வேறு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அரசிடம்முறையிட்டும்எவ்வித பயனும் இல்லை. ஆசிரியர்கள் தவறுசெய்யும்பட்சத்தில் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கலாம்.ஆனால் தவறு செய்யாத ஆசிரியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்நடக்கின்றனஇதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசு டாக்டர்களுக்கு உள்ளது போன்று பணிப் பாதுகாப்பு சட்டம்வேண்டும்இதை வலியுறுத்தி டிச.,10 அனைத்து ஆசிரியர்களும் கறுப்புபேட்ஜ் அணிந்து வகுப்பு நடத்தவும்மாலை 5 மணிக்கு பள்ளிகள் முன்போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுஇதில் அனைத்துஆசிரியர் சங்கங்களும் பங்கேற்கின்றன என்றார்.