Breaking News

நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது


பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. கல்லுாரிகள்,பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை
பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.

தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., நடத்துகிறது.இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களை தேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, யு.ஜி.சி., மாற்ற உள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன