வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5
ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐவங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில்குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்கவேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம்வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்குவைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையேஏற்படுத்தியுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம்ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில்இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா?குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வதுஎன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த சராசரி இருப்புத் தொகைரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே இதற்குக்காரணம்.
அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், ஒரு மாதம்முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத்தொகையாகும். வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும்பணத்தை அதாவது 30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக்கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத்தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும். இந்த ஈவுத்தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்தஅபராதமும் விதிக்கப்படாது.
உதாரணத்துக்கு...
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, மாதத்தின் முதல்நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல்விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும்.அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும்ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரிஇருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது. அதன்பிறகுநீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம்வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.
இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகைகணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லைஎன்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப்பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தைவைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத்தேவையில்லை.
அதோடு, மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமேரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம்.நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்குவைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான்குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.
இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்புவைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகள்வழங்கப்படுகிறது.
அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல்பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கிஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாகவசூலிக்கப்படும்.
ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்புஇருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும்கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில்எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாதுஎன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்என்னென்ன?
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால்,நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்கவேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ளஎஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து மேலே விரிவாகவே பார்த்துவிட்டோம்
குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திரவங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விடகுறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
மெட்ரோ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்புவைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால்ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
ஊரக, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும்சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்துவாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.
டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றிபணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொருடெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும், சேவைக் கட்டணமும்விதிக்கப்படும்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம்எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாகவசூலிக்கப்படும்.
அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்புஇருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும்கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில்எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாதுஎன்று அறிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம்செய்கிறது.
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும்ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர்,பட்டியாலா ஆகிய 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு
பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க்ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப்இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை முறைப்படி இணைந்தன.இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர்அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப்பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின்ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்டபாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐவங்கியுடன் இணைந்தன.
இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள்எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐவங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின்எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.