வழிகாட்டிக் கையேட்டை மாணவிக்கு வழங்குகிறார் பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' முறை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னையை அடுத்த பொன்மார் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பத்மாவதிபொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மேற்படிப்பு,வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கு தொடக்க விழாவியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் அனைத்துமாவட்டங்களிலும் 1,162 இடங்களில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2பள்ளிக்கல்வி நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை, வழிகாட்டல் பயிற்சி கருத்தரங்குகள்நடத்தப்பட உள்ளன.
மாணவ, மாணவியர் விரும்பும் படிப்புகளை வழங்கும் கல்விநிறுவனங்கள் எங்கு அமைந்துள்ளன என்பது குறித்த விரிவானதகவல்கள் அடங்கிய வழிகாட்டும் கையேடு இலவசமாகவழங்கப்படும். அதில் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும்கல்வி உதவித்தொகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவிவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்தக் கருத்தரங்குகள் சென்னையில் வரும் 18, 19 ஆகிய இருநாள்கள் நடைபெறும். தமிழகமெங்கும் 152 நகராட்சிகள், 387ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்படும் வழிகாட்டுதல் பயிற்சிக்கருத்தரங்குகள் மூலம் 10-ஆம் வகுப்பு பயிலும்
சுமார் 10 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 பயிலும் சுமார் 10 லட்சம்மாணவர்களும் பயன் பெற உள்ளனர். இக் கருத்தரங்குகள் நகர்ப்புறபள்ளி மாணவ, மாணவியரைவிட, கிராமப்புற பள்ளி மாணவ,மாணவியர் அதிக அளவில் பயன் பெற வாய்ப்புள்ளது என்றார் அவர்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:கடந்த 6 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு ரூ.1,10,323 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குப்பெற தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு, சட்டப்பேரவையில் விரைவில்வெளியிடப்படும். ஆசிரியர் நியமனத்தில் பழைய வெயிட்டேஜ்முறையே தொடரும் என்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாநில கல்வியியல்,பயிற்சி இயக்கக இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணைஇயக்குநர் பி.குப்புசாமி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் பி.உஷா, தென் சென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர்சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன், பிரின்ஸ் கல்விக்குழுமத் தலைவர்கே.வாசுதேவன், துணைத் தலைவர் வி.விஷ்ணு கார்த்திக் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.