உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநிலதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2016 அக்டோபரில், இரு
கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்த தேர்தலை, மே, 14க்குள் நடத்தி முடிக்க, உயர் நீதிமன்றம்உத்தரவிட்டு ள்ளது.
இந்த உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைஎடுப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.பள்ளி, கல்லுாரிகளுக்கான கோடை விடுமுறை துவங்கஉள்ளது.இதனால், ஆசிரியர்கள் விடுமுறையை கழிக்க, வெளியூர்களுக்குசென்றுவிட்டால் சிக்கல் ஏற்படும். எனவே, ஆசிரியர்களுக்கு தேர்தல்பயிற்சி வகுப்புகள் நடத்த, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு,கமிஷன் உத்தர
விட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடும்ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.