Breaking News

TNTET - 1,114 -வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை (மெரிட்) பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு (Selection List) பட்டியல் வெளியிடப்படும்

TNTET - 1,114 ஆசிரியர் காலிப் பணியிடங்களின் பாட வாரியான தகவல்கள் - TRB வெளியீடு தொடர்பான விரிவான தகவல்கள். (முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பணி வாய்ப்பை பெற்றும், பணியில் சேராத நபர்களுக்கான மறுவாய்ப்பு தற்போது வழங்கப்பட உள்ளது) - நாளிதழ் தகவல்.
TNTET - 1,114 ஆசிரியர் காலிப் பணியிடங்களின் பாட வாரியான தகவல்கள் - TRB வெளியீடு.
 முந்தைய TNTET தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பணி வாய்ப்பை பெற்றும், பணியில் சேராத நபர்களுக்கான மறுவாய்ப்பு தற்போது வழங்கப்பட உள்ளது.

🔸 ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
🔹 இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET 2017) ஏப்ரல் 29 & 30 தேதிகளில் நடைபெறுகிறது.
🔸 ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 32,500 நபர்கள் பணி வாய்ப்பை பெறாமல் இருக்கிறார்கள்.
🔹 அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
🔸 இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
🔹 இந்த காலியிடங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மத்திய இடைநிலை கல்வி திட்டம் (RMSA) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
🔸 அந்த பணியிடங்களில் பாடப்பிரிவுகள் வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
🔹 நிரப்பப்படும் காலியிடங்களில் புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில் தான் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
🔸 அதிலும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பிசி (முஸ்லிம்) ஆகிய இட ஒதுக்கீட்டினருக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன.
🔹 துறை வாரியாகவும் பாடப் பிரிவுகள் வாரியாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் காலியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
🔸 மேற்குறிப்பிட்ட பணி நியமனத் துக்காக முந்தைய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் தனியாக ஏதும் விண்ணப் பிக்கத் தேவையில்லை.
🔹 அவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே உள்ளது.
🔸 முன்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேராமல் தற்போது சேர விரும்புவோர் மட்டும் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.
🔸 தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

🔹 அது முடிந்ததும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை (மெரிட்) பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு (Selection List) பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.