Breaking News

தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசு தொடக்கப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!

லட்சங்களைக் கொட்டி கொடுத்துஎல்.கே.ஜி அட்மிஷன்பெறுவதற்காகதனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப்

போட்டு படுத்திருக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம்ஆனால்,அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காகபோட்டிபோட்ட அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அட்மிஷனுக்காக காத்திருக்கும் குழந்தைகள்

நூற்றுக்கணக்கான பிள்ளைகளுடன் அந்த அரசுப் பள்ளியில்பெற்றோர்கள் குவிய, ''மன்னிச்சுக்கங்க... 75 பிள்ளைகளுக்குத்தான்இடம் இருக்குமத்தவங்க கோவிச்சுக்காம வேற பள்ளியில் முயற்சிசெய்து பாருங்க'' எனச் சொல்லிக்கொண்டிருந்தார் பள்ளியின் தலைமைஆசிரியர்.

பள்ளியில் இடம் கிடைக்காதவர்கள் வருத்தமான முகத்துடன் கிளம்ப,அட்மிஷன் முடிந்த 75 குழந்தைகளோடும் பல்சுவை நிகழ்ச்சிகளோடும்உற்சாகமான தொடக்க விழா நடந்ததுஅந்தப் பள்ளியின் ஓய்வுபெற்றஆசிரியர்கள் விழாவைத் தொடங்கி வைக்க, 75 மாணவர்களுக்கும்வண்ண வண்ண பலூன்கள்ஆளுக்கொரு மரக்கன்றுகள்வழங்கப்பட்டனவேறு பள்ளிகளின் ஆசிரியர்கள்தலைமைஆசிரியர்களும் விழாவில் பங்கேற்றனர்கரூர் மாவட்டம்நரிக்கட்டியூர்கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இத்தனைஅதிசயங்களும்.

அரசுப் பள்ளி குழந்தைகள்
 

"நாங்கள் இந்தப் பள்ளியில் வேலைப் பார்த்தபோது ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒட்டுமொத்த மாணவர்களின்எண்ணிக்கையே பத்து பேருதான்மாணவர்களின் சேர்க்கையைஅதிகரிக்க என்னென்ன வித்தைகளையோ செய்துப்பார்த்தோம்இந்தப்பள்ளி கரூர் நகரில் இருந்து மூன்று கிலோமீட்டரில் துரத்திலேயேஇருப்பதால்எல்லோருமே நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத்தான்சென்றார்கள்இந்தப் பள்ளியையே 'சிங்கிள் டிஜிட் பள்ளிஎன்றுதான்அழைப்பார்கள்சேர்க்கை குறைவாக இருக்கிறது எனச் சொல்லிஅதிகாரிகளும் பள்ளியை மூடிவிட இருந்தார்கள்ஆனால்இன்றுமொத்தமாக 300 பிள்ளைகளைப் பார்க்கும்போது ஆனந்தக் கண்ணீர்வருகிறதுதனியார் பள்ளி மாயையை கிழித்தெறிந்திருக்கும் நாள் இது''என்று மகிழ்ந்தார்கள் முன்னாள் ஆசிரியர்கள்.

பெற்றோர்

கூட்டத்தில் பேசிய சில பெற்றோர்கள், "பத்து வருடங்களுக்குமுன்புவரை இந்தப் பள்ளியை கடந்துசெல்லும்போதுகூட நிமிர்ந்துபார்த்ததில்லைஆனால்பள்ளியில் நடந்த மாற்றங்கள்தனியார்பள்ளிகளுக்கு இணையான வசதிகள்கற்பிக்கும் முறைகள் பற்றிமெல்ல பிரின்ஸிபால்மெல்ல கேள்விப்பட்டு எங்கள் பிள்ளைகளைசேர்க்க ஆரம்பித்தோம்எங்கள் பிள்ளைகள் அழகாக ஆங்கிலம்பேசுவதையும்தெளிவாகத் தமிழ் எழுதுவதையும் பார்க்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கிறதுகம்ப்யூட்டர்யோகாஇசைவிளையாட்டு,நடனம் என எல்லா வகையிலும் எங்கள் பிள்ளைகளின் திறமைகளைவளர்த்தெடுக்கிறார்கள்எங்களுக்கு ஒரு ரூபாய் செலவில்லை'' என்றுநெகிழ்ந்தார்கள்.

அரசுப் பள்ளியின் மீது 200 சதவிகித நம்பிக்கையைச் சாத்தியமாக்கியஇந்த மாயம் நிகழ்ந்தது எப்படி?

பள்ளியின் தலைமை ஆசிரியையான விஜயலலிதா, ''அர்ப்பணிப்பும் சகஆசிரியர்களின் கூட்டு முயற்சியும்தான் காரணம்ஒவ்வொரு ஆண்டும்வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசுவோம்அவர்களுக்குப்பள்ளியின் மீது நம்பிக்கை வருவதற்காகஅரசு மற்றும் தனியார்ஆர்வலர்களின் நிதியுதவியில் கட்டமைப்பு வசதிகளைஉருவாக்கினோம்குழந்தைகளைக் கவரும் வகையில்வகுப்பறைகளிலும் ஓவியங்கள் வரைந்தோம்ஒவ்வொரு குழந்தையின்தனித்திறமையையும் ஊக்கப்படுத்திநிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள்வழங்கினோம்இவையெல்லாம் சேர்ந்து இந்த வெற்றியைச்சாத்தியமாக்கியதுஇப்போதுஆண்டுதோறும் பெற்றோர்களேபள்ளிக்கு சீர் வரிசை எனச் சொல்லி விழா நடத்தி உதவி வழங்கும்அளவுக்கு மாற்றி இருக்கிறோம்இந்தப் பள்ளிக்கு வரும் ஒவ்வொருகுழந்தையையும் எங்கள் குழந்தையாக நினைத்து அவர்களின்எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுகிறோம்'' என்கிறார்புன்னகையுடன்.


ஒவ்வொரு அரசுப் பள்ளியும் இதுபோன்ற முயற்சியில் இறங்கினால்,ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.