Breaking News

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற
தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017.
இந்த ஆண்டு வெளிப்படைத்தன்மையுடனும் உரிய வகையிலும் நிரப்பப்பட உள்ள இந்த 25% இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளிலும் இலவச கல்வியை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்த செய்வோம்.
தற்போதுவரை தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை ஒதுக்கிவிட்டு ஏதோ ஓர் மோகத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் செலவு செய்யும் கிராமபுற ஏழை மாணவர் குடும்பங்களுக்கு முதலில் இத்தகவலை கொண்டு சேர்ப்போம்!
ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்.
http://tnmatricschools.com/rte/rtehome.aspx
உங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை? அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறிய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்.
http://tnmatricschools.com/rte/rtepdf.aspx
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும்.