Breaking News
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வுஎப்போது
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!மிக அருகில் வந்துவிட்டது, அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏழாவது ஊதியக்குழு.'நடப்பு நிதியாண்டிலேயே (2016-17) ஊதியக்குழுவின் பரிந்துரைகளை
அமலாக்கம் செய்திட 1.02 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு, ரூ.70,000-யை கோடி பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்ற அறிவித்துவிட்டார்.
அமலாக்கம் செய்திட 1.02 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு, ரூ.70,000-யை கோடி பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்ற அறிவித்துவிட்டார்.
Labels:
PAY COMMISSION
மயில்சாமி அண்ணாதுரை உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் பிரணாப் முகர்ஜி
புது தில்லி : மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின் சார்பில் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.
மொபைல் பேட்டரி வெடித்து சிறுவன் பலி.
மத்தியப் பிரேதச மாநிலம், செகோர் மாவட்டத்தில் மொபைல்போன் பேட்டரி வெடித்ததால் பலத்த தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தான். செகோர் மாவட்டம், பட்கோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஃபதேஹ் என்பவரின் மகன் உவேஷ் (10). இச்சிறுவன் நேற்று தனது மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான்.
Labels:
பத்திரிக்கை செய்தி
6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 6ல் துவங்கி 21ல் நிறைவுறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . இதில் தேர்வுகள் ஏப்ரல் 6ல் துவங்கி 21ல் நிறைவுறுகிறது என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
Labels:
பள்ளிக் கல்வி
CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்
நண்பர்களே :
http://218.248.44.123/auto_cps/public/index.php என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து login செய்யவும்.
http://218.248.44.123/auto_cps/public/index.php என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து login செய்யவும்.
Labels:
CPS
01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு
01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!
1. உங்கள் வேண்டுதல் கடிதம் மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம் (Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம் ஆணை.
Labels:
பள்ளிக் கல்வி
7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு.
தமிழகத்திலுள்ள, 234 தொகுதி பெயர்களை, மனப்பாடமாக சரளமாக ஒப்பித்து, 7 வயது அரசு பள்ளி மாணவி அசத்தினார். அவருக்கு, பணமுடிப்பு வழங்கிய சப் - கலெக்டர், தேர்தல் துாதுவராகவும் அறிவித்தார். சட்டசபைதேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டளிக்க வாருங்கள் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
Labels:
பத்திரிக்கை செய்தி
10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல்துவங்குகிறது. 'தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன.
Labels:
SSLC
தேர்வு நேரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் புலம்பல் !
தேர்வு நேரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால்
ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13வரை நடக்கிறது. ஆறு முதல்9ம் வகுப்பு களுக்கு ஏப்ரலில் தேர்வு துவங்குகிறது. தேர்வு சமயத்தில் சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு அனை வருக்கும் இடைநிலைக்
கல்வித்திட்டம் மூலம் மார்ச்18முதல் ஏப்., 6வரை10நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13வரை நடக்கிறது. ஆறு முதல்9ம் வகுப்பு களுக்கு ஏப்ரலில் தேர்வு துவங்குகிறது. தேர்வு சமயத்தில் சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு அனை வருக்கும் இடைநிலைக்
கல்வித்திட்டம் மூலம் மார்ச்18முதல் ஏப்., 6வரை10நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
Labels:
பள்ளிக் கல்வி
பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு:
தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம் முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
Labels:
B.ED
காரைக்குடி மின்வேதியியல் ஆய்வு மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம்த்தில் நிரப்பப்பட உள்ள 24 ஆராய்ச்சியாளர்,
முதுநிலை ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்றபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலை ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்றபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2016 தேதி: 27.02.2016
வங்கி பணிக்காக காத்திருப்போர் விரைந்து விண்ணப்பித்திடுங்கள்!
அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்கள் (கிரேடு 'ஏ')
புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்
இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.
Labels:
பள்ளிக் கல்வி
ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
200 செவிலியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்கீழ் போபாலில் செயல்பட்டும் வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 200 ஸ்டாப் நர்ஸ் (கிரேடு2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டதாரிகளுக்கு 270 உதவி கமாண்டன்ட் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் காலியாக உள்ள 270 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை 'சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2016' எனப்படும் இந்த தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி. வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
பிளஸ் 2வில் முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்
தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், கல்வியாளர்கள், எஸ்.எஸ்.ராஜகோபாலன் மற்றும் வசந்தி தேவி, பேராசிரியர் சிவக்குமார், ஆசிரியர் மூர்த்தி ஆகியோர், நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில், கல்வி முறையில் பல குழப்பங்கள் உள்ளன.
Labels:
பள்ளிக் கல்வி
வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை.
Labels:
பத்திரிக்கை செய்தி
வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம். அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.
டி.ஆர்.டி.ஓ.,வில் ‘சயின்டிஸ்ட்’ வாய்ப்பு!
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.,) மற்றும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜன்சியில் (ஏ.டி.ஏ.,) சயின்டிஸ்ட் அல்லது இன்ஜினியராக பணியாற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்
நண்பர்களே :
http://218.248.44.123/auto_cps/public/index.php என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து login செய்யவும்.
Labels:
CPS
மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு
மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.
Labels:
பள்ளிக் கல்வி
ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!
ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Labels:
பத்திரிக்கை செய்தி
+2 வேதியியல் தேர்வு: தவறான 2 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சுற்றி வளைத்து கேட்டதாகவும், கடந்த 10 வருடங்களில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் கூறி மாணவர்கள் ஏராளமானவர்கள் குற்றம் சாட்டியதோடு மிகவும் வருத்ததிற்குள்ளாகினர்.
எனவே, வேதியியல் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என்று பல மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது:- பிளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண்கேள்வியில் 17-வது வினா சரியாக கேட்கப்படவில்லை. மேலும்5 மதிப்பெண் கேள்வியில் 70-ம் எண் கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருந்தது. கேள்வியில் 11 என்று இருப்பதற்கு பதிலாக ரோமன் எழுத்தில் கேட்கப்பட்டு இருந்தது.
ரோமன் எழுத்தில் இரண்டு என்றால் அது கால்சியத்தை குறிக்கும். ரோமன் எழுத்து அல்லாமல் 11 என்றால் அது காப்பரை குறிக்கும். இந்த இரு வினாக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் 1 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 6 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.
Labels:
HSC
தேர்வு ஒருபக்கம்; தேர்தல் மறுபக்கம்
தேர்வு பணி, தேர்தல் வேலை என, இரட்டை பணிச்சுமையால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மூன்றாம் பருவ பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது; மறுபக்கம், சட்டசபை தேர்தல் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளன. தேர்வு பணி மற்றும் தேர்தல் பணி என, இரண்டிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏப்., 22ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு துவங்குகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
+2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியாது என்ற விரக்தியில், சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்தார்.
Labels:
பள்ளிக் கல்வி
பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்
பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கே வர வேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் 17 பேரும் வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Labels:
பள்ளிக் கல்வி
பி.எப்., பணத்தை எடுக்க புதிய நெறிமுறைகள்
பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்க, புதிய நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் படி, பணியில் இருந்து விலகியவர்கள் தங்கள் முழுத்தொகையையும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
பிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்:மனப்பாடத்தை நம்பிய பள்ளிகள் தவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
Labels:
பள்ளிக் கல்வி
பிளஸ் 2 தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை.
'பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளில், மதிப்பெண் வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும்' என, தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாள், மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருந்ததாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Labels:
பள்ளிக் கல்வி
பிளஸ்- 2 கணினி அறிவியல்: 4 வகை வினாத்தாள் தயார்.
பிளஸ்- 2 கணினி அறிவியல் தேர்வுக்கு நான்கு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை செய்திக்குறிப்பு: பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வு இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதில் 30 பக்கங்களுக்குகோடு இல்லாத விடைத்தாள் வழங்கப்படும். மேலும் 75 ஒரு மார்க் அப்ஜெக்டிவ் வகை வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.
Labels:
பள்ளிக் கல்வி
பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்
பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கே வர வேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் 17 பேரும் வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Labels:
HSC,
பள்ளிக் கல்வி
4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
TNPSC DEPARTMENTAL EXAMINATIONS DECEMBER 2015 RESULTS PUBLISHED.
Results of Departmental Examinations - DECEMBER 2015
(Updated on 17 March 2016) |
Labels:
DEPARTMENTAL EXAM,
RESULT
TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பத்தாம் வகுப்புகள் போதிக்க ஒதுக்கீடு செய்வதில் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்.
TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிர் வரும் கல்விஆண்டிற்கான பத்தாம் வகுப்புகளை ஒதுக்கீடு செய்ய தலைமை ஆசிரியர்களிடையேகுழப்பம்.23/08/2010 க்குப் பிறகு தமிழக அரசின் முழுமையான ஒப்புதல் பெற்றுஅரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரியும் சுமார் 3300ஆசிரியர்கள் எதிர் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் TNTET ல் தேர்ச்சிபெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற அரசாணை தற்போது உள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
தில்லி நீதிமன்றம் தடை எதிரொலி: மீண்டும் விற்பனைக்கு வருகிறது `விக்ஸ் ஆக்ஷன் 500'
சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து 'விக்ஸ் ஆக்ஷன் 500' உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
+2 வேதியியல் தேர்வு வினாத்தாளில் பிழை : மதிப்பெண் வழங்க கோரிக்கை
சென்னை: பிளஸ் 2 தேர்வில் இடம் பெற்ற கேள்விகளில் ஒரு கேள்வியில் பிழையான குறியீடு அச்சிட்டு இருந்ததால்
மாணவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. பிழையான அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடந்த 14ம் தேதி நடந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் சில, பாடப்பகுதியின் இறுதியில் இடம் பெறும் பயிற்சி வினாவில் இருந்து கேட்காமல் பாடப்பகுதியில் இருந்தே
மாணவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. பிழையான அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடந்த 14ம் தேதி நடந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் சில, பாடப்பகுதியின் இறுதியில் இடம் பெறும் பயிற்சி வினாவில் இருந்து கேட்காமல் பாடப்பகுதியில் இருந்தே
Labels:
பள்ளிக் கல்வி
தனியார் பள்ளியில், மாணவர்கள் தேர்வு எழுத உதவிய ஆசிரியர்கள்: கூண்டோடு இடமாற்றம்
பரமக்குடி, மார்ச். 17–ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் விடைகளை கூறியுள்ளார்.
இதேபோன்று பிளஸ்–2 வேதியியல் தேர்விலும் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிந்தது.
Labels:
பள்ளிக் கல்வி
ஆசிரியர்கள் சம்பளம் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க டிவிசன் பெஞ்ச் மறுப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேரர்வு கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2011–ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைகள் விற்க தடை.
விக்ஸ் ஆக்ஷன் 500 வகை மாத்திரை உட்பட சுமார் 300 வகைமருந்துகளின், உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ளது. காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதையடுத்து, அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
SSLC & HSC 2016 PUBLIC EXAM QUESTION PAPERS AND KEY ANSWERS DOWNLOAD
SSLC PUBLIC EXAMS QUESTION PAPERS AND KEY ANSWERS
2015-2016.
| ||
QUESTION PAPERS
|
KEY ANSWERS
|
KEY ANSWERS
|
Labels:
HSC,
Model questions,
SSLC
Subscribe to:
Posts (Atom)