சென்னைவாசிகள் தவிப்பு 'பவர் கட், சிக்னல் கிடைக்கவில்லை' என, சென்னைவாசிகள் தத்தளித்து கொண்டிருக்க, 'சென்னையில் தானே நெட்வொர்க் பிராப்ளம், நாங்க பாத்துக்குறோம்' என, உலகெங்கும் உள்ள தமிழ் நெட்டிசன்கள் ஒன்றுபட்டதும், அதற்கு கிடைத்த பலனும் உண்மையிலேயே பிரமிக்க வைத்துஇருக்கிறது.
தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை ஆளுங்கட்சியினர் தடுப்பதை, ஆதாரத்துடன் வெளியிட்டு, சமூக வலைதளங்களுக்கென ஒரு, 'பவர்' இருக்கிறது என புரிய வைத்துள்ளது. இணையவாசிகள் வெறுமன வாய்ச்சவடால் மட்டுமே விடுபவர்கள் அல்ல என உணர்த்தியுள்ளது.
'சென்னையில், வாகன வசதியுடன் உணவு தயாராக உள்ளது; தேவைப்படும் இடத்திற்கு கொண்டு வரப்படும்' என, தெரிவித்துவிட்டு, தொடர்புக்கு, ஒரு மொபைல் எண்ணையும் பகிர்ந்திருந்தார், டுவிட்டரில் ஒருவர்.
நிவாரண பணிகள்:அதை நுாற்றுக்கும் மேற்பட்டோர், 'ரீட்விட்' செய்ய, அந்த எண்ணை தொடர்பு கொண்டதில், மழையால் பாதிக்கப்பட்ட பலரும் பசியாறி இருக்கின்றனர்; இது, ஒரு உதாரணம் தான்.
'வேளச்சேரி அருகே நண்பர் சபா, 2,000 பேருக்கான உணவுடன் காத்திருக்கிறார்; தொடர்புக்கு...' , 'கே.எம்.சி., மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு குடிநீர் தேவை; தொடர்புக்கு...', மருத்துவ ஆலோசனை; தொடர்புக்கு..' என, பேஸ்புக், ட்விட்டரில், கடந்த நான்கு நாள்களாக எங்கு திரும்பினாலும் நிவாரணப் பணிகள் ஜோர்