Breaking News

இனி ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்பு விடுமுறை-7வது ஊதியக் குழு பரிந்துரை


மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 10 ஆண்டுகளுக்கு ஒருல் 7வது ஊதியக் குழு நியமிக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராய், பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், மீனா அகர்வால் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த கமிஷனின் 900 பக்க அறிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்டது. தன் அறிக்கையில் ஏகப்பட்ட சீர்த்திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறது 7வது ஊதியக் குழு. மிகவும் குறிப்பிடத்தக்க இரண்டு சீர்திருத்தங்கள்... பணித்திறன் ஊதியம், மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கு தங்கள் குழந்தையைப் பராமரிக்க இரண்டு ஆண்டுகள் விடுமுறை. 


ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்புக்கான விடுமுறையை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது, ஊதியக் குழு. ஆண்களுக்கான குழந்தை பராமரிப்பு விடுமுறை பரிந்துரையை வரவேற்கும் அரசு ஊழியர்கள், பணித்திறன் ஊதிய முறையை எதிர்க்கிறார்கள்.

அதென்ன பணித்திறன் ஊதிய முறை..?

அரசு அலுவலகம் என்றால் ஆமை வேகத்தில் தான் இயங்கும் என்பது பொதுக்கருத்தாக மாறிவிட்டது. ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு, பாதி ஆயுளை அதற்காக அலைந்து திரிந்தே தொலைத்தவர்கள் ஏராளம். ‘அரசு வேலையில் சேர்ந்து விட்டோம், இனி சம்பளம், இங்கிரிமென்ட் வந்துவிடும். வேலை பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன’ என்ற மனோபாவம் சில அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. இந்த மனோபாவத்தைத்தான் நாட்டின் வளர்சிக்குத் தடையாகச் சுட்டிக்காட்டுகிறது நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழு.

இதற்கு மாற்றாகத்தான் பணித்திறன் ஊதியம் என்ற திட்டம் முன் வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இருப்பதைப் போல, அரசு ஊழியர்களின் பணித்திறன் முழுமையாக கண்காணிக்கப்படும். தங்களுக்கான பணியை திறமையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் ஊழியர்களுக்கே சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். சரிவர செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தனை பலன்களையும் முடக்க வேண்டும்...” என்கிறது ஊதியக் குழு.