அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழகம் முழுவதும், 15 ஆயிரம் ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான - சர்வ சிக்ச அபியான் திட்டத்தின் கீழ், 15 ஆயிரம், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
'பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதனால், 'சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, போட்டித் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று, 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு, மனு அளித்தனர்.