Breaking News

வேலையில்லா பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஒபிசி) கல்வி உதவித் தொகை


வேலையில்லா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு (ஒபிசி) புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எப்போது விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு: பட்டப் படிப்பு முடித்து வேலை கிடைக்காத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒபிசி மாணவர்கள் 300 பேருக்கு முழு நேர பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில். அல்லது பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்ள கல்வி உதவித் தொகை வழங்கப்படும்