Breaking News

திருக்குறளுக்காக எட்டாம் வகுப்பு சிறுவன் உண்ணாவிரதம்!

திருக்குறளுக்காக எட்டாம் வகுப்பு சிறுவன் உண்ணாவிரதம்!

திருக்குறள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தனது பெயரையே 'குறள்மகன்’ என்று மாற்றிக்கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை சத்தமின்றி செய்துவருகிறார் சுபாஷ் சந்திர போஸ்.    

அவரது தொடர்ந்த பிரசாரத்தின் வழியில் ஜனவரி நான்காம் தேதி திருவாரூர் தொடர் வண்டி நிலையம் அருகில்,  காலை முதல் மாலை வரை திருக்குறள் பரப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்தான் இந்த சிறுவன்.

 
''மொழிகளில் தொன்மையான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் திருக்குறளை அனைவரும்  தொடர்ந்து கற்க வேண்டும். அதற்காக, 'இல்லம்
தோறும் வள்ளுவர், உள்ளம் தோறும் குறள்’ என்ற திட்டம் தயாரித்தேன். திருவாரூர் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று திருவள்ளுவர் சுவரொட்டி தந்து, திறக்குறளின் பெருமைகளைச் சொன்னேன் என்கிறவர், திருக்குறள் விழிப்பு உணர்வுக்காக சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாநோன்பு  இருந்திருக்கிறார்.

சரி இப்பொழுது ஜனவரி நான்காம் நாளை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ? என கேட்க குறள்மகனோ, "இன்றிலிருந்து தொடங்கினால்தான் வள்ளுவர் பிறந்த நாளுக்குள்ளாக  மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.   எல்லாரும் தினமும் ஒரு குறள் மற்றும் அதற்கான விளக்கத்தை படிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் இந்த உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம்" என்கிறார்.