Breaking News

டி.ஆர்.டி.ஓ.,வில் ‘சயின்டிஸ்ட்’ வாய்ப்பு!



ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.,) மற்றும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜன்சியில் (ஏ.டி.ஏ.,) சயின்டிஸ்ட் அல்லது இன்ஜினியராக பணியாற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

காலியிடம்: 163
வயது வரம்பு: 10-04-2016 தேதி நிலவரப்படி 28 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எனினும், இந்திய அரசு விதிமுறைப்படி, பல்வேறு பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
துறைகள்:
பகுதி- 1: 
எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், இயற்பியல், வேதியல், கணிதம் உள்ளிட்டவை.
பகுதி - 2: வேளாண்மை அறிவியல், விலங்கியல் அறிவியல், காக்னிடிவ் சயின்ஸ் மற்றும் பயோமெடிக்கல்
கல்வித் தகுதிகள்: இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில், துறை சார்ந்த இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த பணியிடங்களுக்கு, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில், முதுநிலை பட்டப்படிப்பில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பகுதி-1 பணியிடங்களுக்கு, கேட் 2015 அல்லது 2016ம் ஆண்டு தேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், ‘மெரீட்’ அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பகுதி-2 பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் தகுதியானவர்கள் ‘மெரீட்’ அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ரெக்ரூட்மென்ட் அன்ட் அசிஸ்டண்ட் சென்டர் (ஆர்.ஏ.சி.,) இணையதளமானhttp://rac.gov.in வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10
மேலும் விவரங்களுக்கு: www.drdo.gov.in 
தொலைபேசி எண்கள்: 011-23810965, 23830599.
இ-மெயில்: sp@recruitment.drdo.in, pro@recruitment.drdo.in