15 மாதங்களாக பதிலி ஆசிரியருக்கு ஊதியம் வழங்காமல்அலைகழிப்பு செய்யப்படும் நிகழ்வு திண்டுக்கலில் உள்ள
ஆசிரியருக்கு நேர்ந்துள்ளது.
திண்டுக்கலில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில்ஊதியமில்லா விடுப்பில் சென்ற ஆசிரியருக்கு பதிலாக தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்ற சேசுராஜ் என்பவர் 03.11.2015 முதல் 30.10.2016முடிய பதிலி ஆசிரியராகப் பணியாற்றினார்.
பணிக்காலத்தில் அவருடைய ஊதியம் தொடர்பாக கேட்டபொழுதுமாதாமாதம் ஊதியம் வழங்க இயலாது என்றும் மொத்தமாக மட்டுமேவழங்க இயலும் என்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ளகண்காணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.
ஓராண்டு பணியை நிறைவு செய்தபின் ஊதியம் வழங்க சிலஆயிரங்களை செலவு செய்தபின் பல ஆயிரங்களை எதிர்பார்த்து கடந்தமூன்று மாதங்களாக அலைகழிப்பு செய்கின்றதோடு இல்லாதஅரசாணைகளையும் விளக்கங்களையும் தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.
10,000 ரூபாய் வழங்கினால் 10 நாளில் ஊதியம் வழங்க நடவடிக்கைஎடுப்பதாக கூறிய மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளருக்குபணம் வழங்காததால் மூன்று மாதங்களாகியும் கோப்பினை கிடப்பில்போட்டுள்ளது நியாயம் தானா எனக் குமுறுகிறார் பாதிப்புக்குள்ளானஆசிரியர்.
தமிழக அரசும் கல்வித்துறையும் கண்காணிப்பாளர் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்குமா?