Breaking News
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015
College Road, Chennai-600006
|
Labels:
TET,
வேலைவாய்ப்பு செய்திகள்
மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.
மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை
கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
Labels:
SSLC
தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம்செய்யப்பட்டு01.04.2003க்குப்பின்நிரந்தரம் செய்துபணிவரன்முறைசெய்யப்பட்டஅரசுஊழியர்களில் ஓய்வுபெற்றமற்றும்மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன்மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
Labels:
CPS
விடுமுறைக் கதைகள்- “முதல் மனைவியை நேசியுங்கள்”
முதல் மனைவியை நேசியுங்கள்!
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
Labels:
கதைப் பகுதி
CPS account slip 2009. முதல் பிப்ரவரி 2015 வரை விடுபட்ட தொகைகள் பதிவுடன்
CLICK HERE
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
Labels:
CPS
கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு
நாடு முழுவதும் அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
'இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Labels:
அறிவியல்,
தொடக்க கல்வி
விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம்
1–வது முதல் 9–வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன. விலை இல்லா பாடப்புத்தகங்கள் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
காலி தண்ணீர் பாட்டில்களால் பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை: மாணவர்களின் புதிய முயற்சி
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு தங்களது பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை அமைத்து மாற்றத்துக்கான வடிவமைப்பு விருதையும் பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் தில் செயல்பட்டு வரும் ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித குலத்தை நல் வழிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தீர்வு காணும் வகை யில் நாடு முழுவதும் பள்ளிகளுக் கிடையேயான ‘ஐ கேன் ஸ்கூல் சேலஞ்ச்’ என்ற தலைப்பிலான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
Labels:
அறிவியல்
'ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு
தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27 வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.இத்துடன், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27ம் தேதிக்குள் தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, இரண்டாம் பருவ தேர்வை, ஜன., 18 முதல், 27 வரை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Labels:
தொடக்க கல்வி
15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?
சட்ட அங்கீகாரம் இல்லாமல் செயல்படும், 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கின. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது
Labels:
பள்ளிக் கல்வி
பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை
மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Labels:
பள்ளிக் கல்வி
NMMS Exam Study Materials
- NMMS Study Material 4 | 8th Social Science History | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 3 | 8th Social Science Grography | Mr. P. Saravanan -Click Here
- NMMS Study Material 2 | 7th Social Science | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 1 | 6th Social Science | Mr. P. Saravanan - Click Here
- Science - Click Here
- Science - Click Here
- Social Science - Click Here
- Social Science - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
Labels:
NMMS
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
மாணவன் பார்வை பாதிப்பு ஆசிரியர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்,
மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில், மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, மற்றொரு மாணவன் கையில் இருந்த, 'காம்பஸ்' கருவி, இந்த மாணவன் இடது கண்ணில், தவறுதலாக குத்தி விட்டது.
மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில், மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, மற்றொரு மாணவன் கையில் இருந்த, 'காம்பஸ்' கருவி, இந்த மாணவன் இடது கண்ணில், தவறுதலாக குத்தி விட்டது.
Labels:
தொடக்க கல்வி
10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:'மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 24ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், டிச., 24ம் தேதி மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், டிச., 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Labels:
SSLC
சென்னை பல்கலை: தேர்வு தேதி மாற்றம்
சென்னை, :மிலாதுன் நபி பண்டிகை தேதி மாற்றத்தால், சென்னை பல்கலையின் தேர்வு தேதியும் மாற்றப்பட்டு உள்ளது.
'டிச., 23ல் கொண்டாடப்பட இருந்த மிலாதுன் நபி பண்டிகை, டிச., 24ம் தேதிக்கு மாற்றப்பட்டு, அரசு விடுமுறையும் மாற்றப்பட்டு உள்ளது. எனவே, டிச., 24ல் நடக்க இருந்த தேர்வு, ஜன., 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது'
என, சென்னை பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹர் அறிவித்து உள்ளார்.
Labels:
UNIVERSITY
24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: பள்ளிக்கல்வி இயக்குனர்
மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.
Labels:
பள்ளிக் கல்வி
விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி
பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்விஇயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரைவிடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு
மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
மழை வெள்ள பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.இந்த நிலையில்,
24-ந் தேதி மிலாது நபி, 25-ந் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
NPSC Group 2 & VAO Exam Study Material
Thanks to Adithya Academy, Kanchipuram.
Labels:
Model questions,
TNPSC
Flash News:மிலாது நபி விடுமுறை டிசம்பர் 24-தமிழக அரசு அறிவிப்பு.
மிலாது நபி விடுமுறை டிச23க்கு பதில் டிசம்பர் 24 க்கு மாற்றம் தமிழகஅரசு அறிவிப்பு.
Labels:
பத்திரிக்கை செய்தி
Subscribe to:
Posts (Atom)