Breaking News

தலைமை ஆசிரியர் 'பேனல்' வெளியீடு:


மதுரை: கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நிரப்ப (5:2 அடிப்படையில்) வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதால், தவிர்க்க முடியாமல் பதவி உயர்வு 'பேனல்' நேற்று வெளியானது.இதன்படி மாநிலம் முழுவதும் 1252 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், 963 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 5 நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றனர். இவர்களுக்கு ஆக., 12, 14ல் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 
நடக்கின்றன.65 டி.இ.ஓ.,க்கள் காலி: மாநில அளவில் டி.இ.ஓ.,க்கள், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் என 65க்கும் மேற்பட்ட டி.இ.ஓ., நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான பதவி உயர்வு தகுதி பட்டியலும் வெளியிடப்பட்டு அறிவிப்பு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆக., 12, 14ல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதற்கு முன் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அறிவிப்பு வெளியானால், கலந்தாய்வின் போது தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், "தற்போது 12 கூடுதல் சி.இ.ஓ.,க்கள், 65க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பதவி உயர்வு மூலம் இவற்றை நிரப்பிய பின் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தான் முறை. இல்லை எனில் வழக்கம்போல் குழப்பம் தான் ஏற்படும்" என்றார்.