8ம் வகுப்பு வரை பாஸ்: இனி கிடையாது
புதுடில்லி
: பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்ற கல்வி கொள்கையில்
மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவளத்துறை
இணையமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியா தெரிவித்துள்ளார். தொடக்க கல்வியின்
தரம் மோசமடைந்து விட்டதால், அதனை மேம்படுத்துவதற்காக
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்ச்சி பெற வைக்கும்
கொள்கையை மத்திய அரசு விரைவில் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக, மத்திய
மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா
தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நமது நாட்டில் தொடக்கநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய
அவசியம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொடக்க நிலை கல்வியின் தரம்
மிகவும் மோசமாக உள்ளது. எனவே, முந்தைய அரசுகளால் நாட்டில்
அறிமுகப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்வில்
தேர்ச்சி பெற வைக்கும்
கொள்கையை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறோம்.
முந்தைய அரசுகளின் கொள்கைப்படி, 8ஆம் வகுப்பு வரை வெற்றி பெறச் செய்ய
வைக்கப்படும் மாணவர்கள், 9ஆம் வகுப்பில் திறன்பட செயல்படுவதில்லை என்று
ஆசிரியர்களும், பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.
இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) மசோதா மூலம், ஐஐஎம்-களை
ஊக்குவிக்கவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு
விரும்புகிறது. ஐஐஎம்-களை பலவீனப்படுத்தும் எந்தக் கொள்கைகளையும் அரசு
பின்பற்றாது. அதேசமயம், எந்த அரசு நிறுவனமும் தன்னிச்சையாகச் செயல்படவும்
மத்திய அரசு அனுமதிக்காது என்று ராம்சங்கர் கட்டேரியா கூறினார்.
பல்கலைக்கழக மானியக் குழு தொடர்பான மற்றொரு கேள்விக்கு அவர்
பதிலளிக்கையில், "அந்தக் குழுவை கலைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம்
கிடையாது' என்றார்.