அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்தார்.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கமாக ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவுபெறும்.

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள், ஜூன் மாத மாணவர் சேர்க்கையின்போது விடுபட்ட மாணவர்கள், பள்ளியில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயதை நிறைவு செய்யும் மாணவர்கள் ஆகியோரின் நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,9,11 ஆகிய வகுப்புகளில் 37 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து, விடுபட்ட மாணவர்களையும் பள்ளிகளில் சேர்ப்பதற்காகக் கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருந்தாலும், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.