Breaking News

தாவரங்கள் நீரை உறிஞ்சும் விதம்

 

தாவரங்கள் பூமியிலுள்ள நீரை வேரின் மூலம் உறிஞ்சி அவற்றின் பிற பாகங்களுக்கு அனுப்புவது நாம் அறிந்திருக்கிறோம். அந்நிகழ்வை கண்ணால் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கும் ?
இதோ இந்த பரிசோதனை அதை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் !
எச்சரிக்கை: வெட்டுவதற்கு கத்தி போன்ற உபகரண்ங்கள் பயன்படுத்த வேண்டியிருப்பதால் பெரியவர்கள் துணையுடம் இப்பரிசோதனையை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
  1. சிலரி (celery) எனப்படும் ஒரு வகை தண்டுக்கீரை இது தற்போது அனைத்து பெரிய நகரங்களில் கிடைக்கிறது. இக்கீரை கிடைக்காதவர்கள் நம்ம ஊர் தண்டுக்கீரையை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
  2. தண்ணீரில் கரையக்கூடிய வண்ணங்கள்; (நீலம்,இங்க்,கேசரி பவுடர்,கருப்பு மை போன்றவை)
  3. கண்ணாடி குவளைகள்
  4. வெட்டுவதற்கான கத்தி
  5. தண்ணீர்
செய்முறை:
கிடைக்கும் வண்ணங்களைப் பொறுத்து கண்ணாடி குவளைகளில் அரைப்பாகம் நீரை நிரப்பி வண்ணங்களை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்;
water in color
சிலரி கீரையின் தண்டுப்பகுதியை கண்ணாடி குவளையின் அளவு போல் இரண்டு மடங்கு இருக்குமாறு வெட்டிக்கொள்ளவும்.
celery in color
வண்ணம் நிரப்பிய கண்ணாடி குவளைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தண்டை இட்டு சுமார் அரை மணிநேரம் கழித்து பார்க்கவும்
தண்டுகளில் உள்ள சிறு துளைகளில் வண்ண நீர்த்துளிகளை காணலாம்.
celery
தண்டு மட்டுமில்லாமல் மேலே உள்ள இலைகளோடு படத்தில் காட்டியபடி அமைத்து சுமார் 18 மணி நேரம் கழித்து பார்த்தால்..
Science-Craft-Celery-Food-Coloring-Experiment-for-kids
 ஆஹா ! என்ன வண்ணமயமான இலைகள் !?
celery keerai
சரி ! சிலரி கீரை கிடைகாதவர்கள் இதே போல் தண்டுக்கீரையை பயன்படுத்தி செய்யலாம். ஆனால் தண்டுக்கீரையை வேறுடன் நீறுக்குள் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
keerai-in-color-water