Breaking News

பகுதி நேர ஆசிரியர்களை பந்தாடும் தமிழக அரசு சம்பள நிலுவை தொகை வழங்க நிதி இல்லையாம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு என கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆசிரியர்களின் தொடர்ச்சியான முயற்சியால், கடந்த வாரம் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இந்நிலையில், அதற்கான நிலுவை தொகையை நிறுத்தி வைத்து, திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடப்பு மாதம் மட்டும் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறுிவுறுத்தப்பட்டுள்ளது. 
ssa திட்டத்திற்காக, நடப்பு கல்வியாண்டில், மத்திய அரசு 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதிலிருந்து தான் பகுதி நேர ssa ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்நிலையி்ல் நிதி நிலையை மேற்கோள் காட்டி, நிலுவை தொகையை நிறுத்தி வைப்பது எந்தவிதத்தில் நியாயம்.
ssaவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 2,400 கோடி என்ன ஆனது. எங்கே போனது. விலையில்லா ஆடு, மாடு, மடிக்கணினி, மிக்சி கிரைண்டர், மின்விசிறி என வழங்க மட்டும் அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளதா?
பணி நிரந்தரம் இப்போதைக்கு இல்லை என்றாலும், முன்தேதியிட்ட ஊதிய உயர்வு காரணமாக, சற்றே நிம்மதியடைந்திருந்த பகுதி நேர ஆசிரியர்களின் சந்தோஷம், ஒரே வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
16,500 பகுதி நேர ஆசிரியர்களையும் சேர்த்து தான் 54,000 ஆசிரியர்களை ஒரே ஆண்டில் நியமனம் செய்ததாக, சட்டசபையில் மார்தட்டிக்கொண்டது இந்த அரசு. ஆனால், தங்களின் ஆட்சிக்காலத்தை பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யாமலே ஓட்டிவிட நினைப்பதும், அவர்களுக்காக, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை வழங்காமல் புறக்கணிப்பதும், ......