Breaking News

பள்ளிக்கல்வி - 2015/2016 ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதுகள் - தகுதி உள்ள பரிந்துரைகள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் - கடைசி தேதி 30.09.2015 CLICK HERE - INDIAN COUNCIL FOR CHILD RIGHTS AWARD - APPLICATION.....


ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு 377 ஆசிரியர்கள் தேர்வு


ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

மறைந்த முன்னாள் ஜானதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செம்படர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப்பள்ளி - 201, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி - 134, மெட்ரிக் - 30, ஆங்கிலோ இந்தியன் பள்ளி - 2, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் - 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பி.எட்.: முதல் நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது விண்ணப்ப விநியோகம்


ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியது.
 இது கடந்த ஆண்டுகளைவிட அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.
 2015-16 கல்வியாண்டில் பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. கலந்தாய்வு செப்டம்பர் 4-ஆவது வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் வியாழக்கிழமை (செப்.3) தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
 பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
 இந்த நிலையில், விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
 இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலரும், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வருமான ஆர். பாரதி கூறியதாவது:

புகாரில் சிக்கினால் இடமாறுதல் இல்லை:ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நிபந்தனை


விருதுநகர்:அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.அவை வருமாறு:

புதிய பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கக்கூடாது. எந்தப்பாடப்பிரிவை சார்ந்தவரோ அதே பாடப்பிரிவைச் சேர்ந்தவரையே அவரது இடத்தில் பணியமர்த்த வேண்டும். எவ்வித புகாரும் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பெற்று செப்.,10க்குள் சமர்ப்பிக்க வேண்டும் செப்.,11,12ல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
மாவட்ட அளவிலான மனமொத்த மாறுதல் உத்தரவு செப்.,14, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான மாறுதல் உத்தரவு செப்.,15ல் வழங்கப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்: ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5



நம் நாட்டில் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்' எனப் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்குத்தான் வழங்கி இருக்கிறார்கள் இல்லையா? இறைவனுக்குக்கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான். அறிவு விதையை நமக்குள் விதைக்கும் ஆசிரியர்களை ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்றும், ‘ஏற்றி விடும் ஏணி’ என்றும் பெருமையாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் போற்றும் நாளான ஆசிரியர் தினம் எப்படி வந்தது?
1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதிதான் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பிறந்த தினத்தைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடிவருகிறோம். இவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு துணைத் தலைவரும்கூட.

போட்டித் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் -விரைவில் அறிவிப்பு

­

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளி களில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறி வித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறையின் 2015-16-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 


அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணிக்கு சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிக் கல்வித்துறை கடந்த 17.11.2014 அன்று அரசாணை வெளியிட்டது.

பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மாநகராட்சிப் பள்ளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் ஆகியவை 1,188 சிறப் பாசிரியர்களை தேர்வுசெய்ய தேவைப்பட்டியல்களை சமர்ப்பித் துள்ளன. சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


நெடுஞ்சாலைத்துறையில் உதவிப்பொறியாளர்கள் காலிப்பணியிடங்கள் 213 உள்ளன. இந்த இடங்களுக்கு சரியான பட்டதாரிகளை தேர்ந்து எடுப்பதற்கான எழுத்துத்தேர்வு 6–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 


சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளமான www,tnpsc.gov. in ல் வெளியிடப்பட்டுள்ளது.

1,078 எஸ்ஐகளை தேர்வு செய்ய இன்று முதல் நேர்முகத் தேர்வு


தமிழகம் முழுவதும் 1,078 எஸ்ஐகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு இன்று காலை தொடங்குகிறது. சென்னை எழும்பூரில் உள்ள  பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒன்றரை மாதம் வரை நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


தமிழக காவல் துறையில் 984 எஸ்ஐ (சார்பு ஆய்வாளர்) காலி பணியிடங்கள் மேலும் பின்னடைவு காலிபணியிடங்கள் 94 என 1,078 எஸ்ஐ  பணியிடங்களை நிரப்புவதற்கான பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மே 23ம் ேததி நடந்தது.


காவல்துறைக்கான 20 சதவீத ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு மறுநாள் நடந்தது. இந்த தேர்வுகள் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட  தலை நகரங்களில் 114 மையங்களில் நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வாக உடல் தகுதி தேர்வு ஆகஸ்ட் முதல்  வாரத்தில் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் நடந்தது. மார்பளவு, உயர அளவு, 1500 மீட்டர் ஓட்டப் பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. படிப்புகள் அறிமுகம்


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல்பி.எஸ்சிஅறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர்
சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளதுதொலைநிலைக்கல்வி வாயிலாக விலங்கியல்தாவரவியல்வேதியியல்இயற்பியல்தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன எனதமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பட்டியலை திரட்டும் அரசு

பணி நிரந்தரம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பகுதி நேரஆசிரியர்கள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திரட்டி 

வருவதால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,அரசின்  கவனத்துக்கு எடுத்து செல்லும்  வகையில் கடந்த 31ம் தேதிகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில்எந்தெந்த  பகுதிகளில் யார்யார்பங்கேற்றனர் எனஉளவுத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தகவல்களைதிரட்டி வருகிறது.

ஆசிரியப்பயிற்றுனர்கள் மனமொத்த மாறுதல் தேதி அறிவிப்பு



பள்ளி வசதியில்லாத பகுதிகளில், 499 தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும்

சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான  வாதத்தின் போது, நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்து, கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 


மாணவர்கள் கணித பாடத்தை எளிய வகையில் கற்க, 1.28 கோடி ரூபாய் செலவில், 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும். பள்ளி வசதியில்லாத பகுதிகளில், 499 தொடக்கப் பள்ளிகளை துவங்கவும், 186 தொடக்கப் பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் தகுதியான குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கணினி வழியில், வீடியோ கான்பரன்ஸ் வகுப்புகள் நடத்த, திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார் மற்றும் நாகை மாவட்டங்களில், 70 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, அனிமேஷன் வகை குறுந்தகடுகள், 1.5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆசிரியர் தங்க, திருச்சியில், மூன்று கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் இல்லம் அமைக்கப்படும்.

மருத்துவம்-வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்.....


 உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் 💬 மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: பேரவையில் அமைச்சர் உறுதி


காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பா.வளர்மதி பதிலளித்துப் பேசினார்.
அமைச்சர் பேசி முடித்ததும் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி எழுந்து, ‘‘சத்துணவு மையங்களில் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை எப்போது நிரப்பப்படும்’’ என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்மதி, ‘‘சத்துணவு மைய பணியாளர்கள் தொடர்பானவழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சில வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு:நேற்று நடந்த வழக்கின் முழு விபரம் .


ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்–முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பினருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசாணை
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ்முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரைகிளையிலும் சிலர் வழக்குகள் தொடுத்தனர்.

பி.இ. முடித்தவர்கள் பி.எட். படிக்கலாமா? அமைச்சர் விளக்கம்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பொறியியல் முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.

சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டி பேசுகையில், ""பி.எட். படிப்பை பொறியியல் முடித்தவர்களும் படிக்கலாம் என இம்முறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், பி.இ. முடிப்பவர்கள் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேரமுடியுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ஏற்படுகிறது'' என்று கூறினார்.

ஒரே பதிவெண்; ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் தகவல்


மேல்நிலை / இடைநிலை தேர்வெழுதும் தேர்வர்களுக்கு ஒவ்வொரு பருவ தேர்வின் போதும் தனித்தனி பதிவெண் வழங்கும் முறைக்கு பதிலாக ஒரு தேர்வருக்கு ஒரே பதிவெண் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.


பள்ளி கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையின் போது பேசிய அவர், மாணவர்களுக்கான புதிய கற்றல் இணையதளம் அமைக்கப்படும் என்றார். மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

499 தொடக்க பள்ளிகள் புதிதாக துவக்க திட்டம்


சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்து, கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: மாணவர்கள் கணித பாடத்தை எளிய வகையில் கற்க, 1.28 கோடி ரூபாய் செலவில், 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.

பள்ளி வசதியில்லாத பகுதிகளில், 499 தொடக்கப் பள்ளிகளை துவங்கவும், 186 தொடக்கப் பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் தகுதியான குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
கணினி வழியில், வீடியோ கான்பரன்ஸ் வகுப்புகள் நடத்த, திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார் மற்றும் நாகை மாவட்டங்களில், 70 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, அனிமேஷன் வகை குறுந்தகடுகள், 1.5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆசிரியர் தங்க, திருச்சியில், மூன்று கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் இல்லம் அமைக்கப்படும்.

தேசிய நல்லாசிரியர் விருது: 25 ஆசிரியர்கள் தேர்வு


தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி 

  • சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ளமீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்தசொர்ணாபாய்

  • திருவள்ளூர் மாவட்டம்தலக்கஞ்சேரி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த தாஸ்

  • தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி பாலசுப்பிரமணியன்

இன்று (1.9.15) சட்டமன்றத்தில் பள்ளி மானிய கோரிக்கையில் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்:



40 தலைமை ஆசிரியர்களுக்கு DEO பதவி உயர்வு செப்.7 முதல் 19 வரை பயிற்சி

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின் அரசு

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி
ஆய்வாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு செப்.,7 முதல் செப்., 19 வரை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அவர்களுக்கான பயிற்சியளிக்கப்படுகிறது.கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“மாவட்ட கல்வி அதிகாரிக்கான பொறுப்புகள், விதிகள், நிர்வாகம் குறித்து முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்,”என்றார்.

15 ஆயிரம் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்


அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழகம் முழுவதும், 15 ஆயிரம் ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான - சர்வ சிக்ச அபியான் திட்டத்தின் கீழ், 15 ஆயிரம், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

'பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதனால், 'சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, போட்டித் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று, 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு, மனு அளித்தனர்.

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் "MATHS KIT BOX TRAINING"


அதேஇ - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் - 2015 : விண்ணபிக்க வேண்டிய கால அவகாசம் நீட்டிப்பு - இயக்குனர் அறிவிப்பு


Dept exam notification dec-2015