Breaking News

மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஆதாரை இணைக்க புதிய 'ஆப்'


மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன்ஆதாரை இணைக்கபுதிய, 'ஆப்'அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறையில்,
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுகிறது.


 இதில்நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, 'ஸ்டெம்செல்மாற்றுஅறுவை சிகிச்சைமூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட 1,016வகை நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெறஅரசுஅனுமதி வழங்கியுள்ளதுதற்போது, 216 வகையானசமீபத்தியமருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பாதிப்புக்கான நிவாரணங்களும்இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன்ஆதார்விபரங்களை இணைக்கும் பணிகள்கிராமங்கள் தோறும் நடக்கின்றன.இதற்காகதிட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுபணிகள் நடக்கின்றன.இருந்தாலும், 40 சதவீத இணைப்பு பணிகளேதற்போது வரைநடந்துள்ளன.

எனவேஇணைப்புப் பணிகளை எளிமையாக்கும் விதத்தில்,பயனீட்டாளர்கள்தாங்களே மருத்துவ காப்பீட்டு விபரங்களுடன்,ஆதார் விபரங்களை இணைத்துக் கொள்ளலாம் எனஅரசு அறிவித்தது.இதற்கு வசதியாக புதிய, 'ஆப்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


திட்ட அலுவலர்கள் கூறியதாவது:


பயனீட்டாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம்.பயனீட்டாளர்கள், www.cmchistn.com என்ற இணையதளத்திற்குசென்று, cmchis online என்ற இணைப்பை, 'க்ளிக்செய்தால், 'ஆப்' பதிவிறக்கம் செய்யலாம்அதில்மருத்துவ காப்பீட்டு திட்டஅடையாள அட்டையில் உள்ள, 22 இலக்க எண்ணை பதிவு செய்து,ஆதார் விபரங்களுடன்மருத்துவ காப்பீட்டு விபரங்களைதாங்களாகவே இணைத்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.