Breaking News

மத்திய அரசில் 736 காலியிடங்கள்

Advertisement

மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுவாக இந்த அமைப்பின் சார்பாக அவ்வப்போது பணி நியமனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு மண்டலங்களிலும் உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாமும் இப்பகுதியில் அவற்றில் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம் என்ற போதும் இதுவரை இந்த அமைப்பின் சார்பாக 736 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை தேடுபவர்களுக்கான பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுக்க இந்த அமைப்பின் இணையதளத்தை பார்ப்பதன் மூலம் நிறைவு செய்ய முடியும்.
எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ள 736 காலியிடங்கள் குறித்த முழுமையான தகவல்களைப் பெற விரும்புபவர்கள் www.jobsarkari.com/company/staff-selection-commission/ என்ற இணையதளத்தைப் பார்த்து விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
காலியிட விபரம்: எஸ்.எஸ்.சி., சி.ஆரில்., 113, எஸ்.எஸ்.சி., இ.ஆரில்., 45, எஸ்.எஸ்.சி., கே.கே.ஆரில் 183, எஸ்.எஸ்.சி.,என்.ஆரில் 200, எஸ்.எஸ்.சி., என்.இ.ஆரில், 13, எஸ்.எஸ்.சி., என்.டபிள்யூ.ஆரில் 28, எஸ்.எஸ்.சி., எம்.பி.ஆரில் 7, எஸ்.எஸ்.சி., எஸ்.ஆரில் 70, எஸ்.எஸ்.சி., டயிள்யூ.ஆரில் 77 சேர்த்து இதுவரை மொத்தம் 736 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து வயது மண்டல வாரியாக மாறுபடும். எனவே தனிப்பட்ட பதவி மற்றும் விண்ணப்பிக்கும் மண்டலத்திலிருந்த்து அறியவும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மண்டல வாரியாக மாறுபடும். எனவே தனிப்பட்ட பதவி மற்றும் விண்ணப்பிக்கும் மண்டலத்திலிருந்த்து அறியவும்.
தேர்ச்சி முறை: பொது எழுத்துத் தேர்வு, பதவியைப் பொறுத்து ஸ்கில் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
விபரங்களுக்கு: https://www.jobsarkari.com/post/2017/ssc-vr-recruitment-various-post-736/"