தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 4,480 பேர்
பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது.
தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 22ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிந்தது.
அதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 252, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 276, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் 139, பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் 122, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு 261, பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதல் 20, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 625, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 500, இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் 1408, இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் 582, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் 238, பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 57 என மொத்தம் 4,480 பேர் உத்தரவு பெற்றுள்ளனர்.