Breaking News

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் பிரசித்தி பெற்ற கனரா வங்கி வீட்டுக்கடன்களை வழங்குவதற்காக கேன்பின் ஹோம்ஸ் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருவது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் 35 ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் மற்றும் ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: ஸ்பெஷலிஸ்ட் ஆபிசரில் 5, ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னியில் 30ம் காலியாக உள்ளன.
வயது: ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் பணிக்கு 25 - 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவுக்கு 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஸ்பெஷலிஸ்ட் ஆபிசருக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் திறனும் கூடுதலாகத் தேவைப்படும். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., பினான்ஸ் படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு பட்டப் படிப்பு, பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., பினான்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சரியான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை நெப்ட் வாயிலாகவோ, கனரா வங்கியின் சலான் மூலமாக CAN FIN HOMES LTD -Current Account No. 0684201001486 என்ற அக்கவுண்டிலோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஜூன் 6.
விபரங்களுக்கு: www.canfinhomes.com/jobapplication.php