Breaking News

பட்டதாரிகளுக்கு எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பணிவாய்ப்பு

Advertisement

மத்திய அரசின் காலிப் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சி.ஜி.எல்., எனப்படும் கம்பைன்டு கிராஜூவேட் லெவல் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகள்: இந்தப் பணியிடங்கள் குரூப் பி மற்றும் சி என்ற பிரிவுகளைச் சார்ந்தது. இதன் மூலம் சி.ஏ.ஜி., சென்ட்ரல் செக்ரட்டேரியட் சர்வீஸ், மினிஸ்ட்ரி ஆப் ரயில்வே, வெளியுறவுத் துறை, சென்ட்ரல் எக்சைஸ், சி.பி.ஐ., நர்காடிக்ஸ் பீரோ உள்ளிட்ட பல்வேறு கேந்திரமான துறைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலியிடங்களுக்கான வயது விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பதவிகளுக்கு அதிகபட்சமாக 27 வயதும், இதர பதவிகளுக்கு அதிகபட்சமாக 30ம், மேலும் சில பதவிகளுக்கு 32 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சரியான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
கல்வித் தகுதி: பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருப்பது தேவைப்படும். சில பதவிகளுக்கு சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு, கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நிலைகளைக் கடந்து இந்தப் பதவிகளைப் பெற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள சி.ஜி.எல்., தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பிக்க விரும்புவர்கள், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2017 ஜூன் 16.
விபரங்களுக்கு: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CGLE2017Notice.pdf