தனியார் கல்லூரிகளுக்கான பி.எட். படிப்புக்குப் புதிய கல்விக் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய கட்டண நிர்ணயத்தால் மாணவர்கள் கடந்த ஆண்டு செலுத்தியதைவிட கூடுதல்கட்டணம் செலுத்த வேண்டும்.
இவை அனைத்தும் ஓர் ஆண்டுகான கல்விக்கட்டணம். மேலும், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன், பி.எட். படிப்புக்கு ரூபாய் 41,500 ஆக கல்விக் கட்டணம் இருந்தது. அப்போது பி.எட். படிப்பு ஓராண்டாக இருந்தது. எனவே, அந்தக் கட்டணத்தில் படிப்பை முடித்து விடலாம். ஆனால், இப்போது பி.எட். படிப்பு, இரண்டாண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.இதனால், 2015 – 16ஆம் ஆண்டு பி.எட். படிப்பில் சேர்ந்தவர்கள் முதலாம் ஆண்டு ரூபாய் 41,500 செலுத்தி உள்ளனர். இந்த ஆண்டு, ரூபாய் 37,500 செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டு படிப்புக்கு மொத்தமாக ரூபாய் 79,000 செலவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, ரூபாய் 75,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, விடுதிக் கட்டணம் தனி என்பதால்ஏழை மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, அரசும் உயர் கல்வித்துறையும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.