Breaking News

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கு விதித்துள்ள தடையினை நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி





சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வித்துறைக்கு பல்கலைக்கழக மானியக்குழு விதித்துள்ள தடையினை ரத்து செய்திட வேண்டும் என் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் டி.கே.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மனிதவளத்துறையில் உயர்கல்வித்துறை செயலாளர் வி.ஓபேராய் ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை (21.8.2015) மாலை புதுதில்லியில் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

வழக்கம் போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியினை தொடர்ந்திட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள். இதுகுறித்து
கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

Animal Husbandry Department Application Download -கால்நடை துறை பணியிடங்களுக்கான விண்ணப்பம்



Advertisement No.Dipr/1007/Display/2015
Advertisement date 14.08.2015
Last date 15.09.2015

Posts :

  • Veterinary Inspector (Training) - 294 Posts
  • Radiographer (Radiotherapy) - 24 Posts
  • Laboratory Attender (Lab Assistant) - 17 Posts
  • Laboratory Technician (Lab Technician) - 2 Posts
  • Electrician - 3 Posts
  • Administrative Assistant (Office Assistant) - 36 Posts
  • Veterinary Assistant - 725 Posts

INSPIRE AWARD LAST DATE EXTENDED UPTO 15 SEPTEMBER 2015


செப்டம்பர் மாத நாட்காட்டி- 2015 உயர் நிலை ,மேல்நிலை,தொடக்க ,நடுநிலை பள்ளிகளுக்கான வேலைநாட்கள் பட்டியல் !


சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்


சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்படுவது போல, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதற்கு முன், கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது பி.எட். படிப்புக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 47,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோல எம்.எட். உள்ளிட்ட பிற படிப்புகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தாலும், பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுவதாலும், மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது.பி.எட், எம்.எட், பி.பி.எட், எம்.பி.எட், டி.டி.எட். படிப்புகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதற்காக, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிடமிருந்து கல்விக் கட்டணப் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன. 
இந்தப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி தேதியாகும். இந்தப் பரிந்துரைகளுக்கான மாதிரிப் படிவத்தை www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து கல்லூரிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது: அறிவிப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு உட்பட்ட அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முடிந்தது. மேலும் சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது.

ஆனால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு கூட இதுவரை வெளியாகவில்லை. இதனால் 65 பள்ளிகளை சேர்ந்த 900 ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், 5 ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறைந்துள்ளது. எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி, தனியாருக்கு மாநகராட்சி பள்ளிகள் தாரைவார்க்கப்படுகின்றன.

சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.


CHECK YOUR PAY STATUS :-
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா?
எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.

மன்னர் காலத்திலே லஞ்சம் வாங்கியவர்களுக்ளு மரணதண்டனை விதித்த தமிழக மன்னன்- கல்வெட்டு கண்டுபிடி்பபு


பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டு
தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென் னேஸ்வரமடம் கிராமம். இங்குள்ள பென்னேஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது, பிரசித்திபெற்றது. இந்தக் கோயில் கல்வெட்டில் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரண தண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பள்ளியில்பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்:


1.ஆசிரியர்வருகைப் பதிவேடு
2.மாணவர்வருகைப் பதிவேடு
3.மாணவர்சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கைவிண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள்உண்மை நகல்
6.அளவைப்பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளிதளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப்பதிவேடு
10.பார்வையாளர்பதிவேடு
11.பள்ளிவிவரப் பதிவேடு (school profile)
12.ஊதியப்பட்டியல்பதிவேடு

அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தின் கீழ் மாணவியர், சிறுபான்மை, பட்டியலின மாணவ, மாணவியர் மற்றும் நகர்ப்புற நலிவடைந்த குழந்தைகளின் அறிவியல் அறிவை வளப்படுத்த, இலவசமாக அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, இந்த சுற்றுலாவில் அழைத்துச் செல்லலாம்.

அறிவியல் 'இன்ஸ்பயர்' விருது:இறுதி போட்டிக்கு 460 பேர் தகுதி


தமிழக அரசின், 'புத்தாக்க அறிவியல் விருது' இறுதிப் போட்டிக்கு, 460 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சென்னை கல்வி மாவட்டத்திலிருந்து, 34 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'இன்ஸ்பயர்' என்ற புத்தாக்க அறிவியல் விருது வழங்கப்படுகிறது. 

மாவட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, வரும், 5, 6ம் தேதிகளில், மாநில அளவிலான இறுதிப் போட்டி, நாமக்கல், மகேந்திரா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்கு, 460 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை கல்வி மாவட்டத்திலிருந்து, 34 பேர், இறுதிப் போட்டிக்கு செல்ல உள்ளனர்

பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு , மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி


ANNAMALAI UNIVERSITY RESULT 2015 PUBLISHED

பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் துவக்கம்- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்


இந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை சனி, ஞாயிறு உள்பட அரசு விடுமுறை நாள்களிலும் காலை 10 மணி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:
2015-16 கல்வியாண்டு பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?


பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
பி.எட்., படிப்பில் புதிய விதிமுறைகள் தொடர்பான குழப்பத்தால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட்., படிப்பு எத்தனை ஆண்டு என்ற குழப்பம் தீர்க்கப்படாமலேயே, மாணவர் சேர்க்கை பணி துவங்கியுள்ளது. மத்திய அரசு அளித்த புதிய விதிமுறைகளையும், தமிழக அரசு எந்த திருத்தமும் இன்றி, அப்படியே வெளியிட்டு உள்ளது.இதன்படி, பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., முடித்தவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!



பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும்
சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஏற்பாடு


பள்ளிகளில் கலை பண்பாட்டுத்துறை துவங்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, பள்ளிகளில் கலை பண்பாட்டுத்துறை மன்றம் ஏற்படுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மன்றங்களை உருவாக்கி மாணவர்கள் இடையே மனிதாபிமான பண்பு, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் போன்றவற்றை வளர்க்க வேண்டும். பள்ளி நூலகங்களில் பல்வேறு வகையான நூல்களை மாணவர்கள் படிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். ஓவியம், கோலப்போட்டி, நடனம், இசை, வினா- விடை போன்ற போட்டிகள் நடத்த வேண்டும். 

சுகாதாரப் புள்ளியிலாளர், புள்ளியில் உதவியாளர்; சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு மருத்துவ சார்நிலையில், வட்டார சுகாதாரப் புள்ளியிலாளர் மற்றும்  பொது சுகாதார சார்நிலை பணியில் புள்ளியில் உதவியாளர் போன்ற பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செப்.,1ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



மேலும் அறிக்கையில்:

ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார். கடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார். இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்



அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தி இருக்கும், தனியார் பள்ளிகளில் வரும், 7ம் தேதி, முதல் பருவத் தேர்வான, காலாண்டுத் தேர்வு துவங்குகிறது; 22ம் தேதி முடிவடைகிறது.

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி ஆசிரியர் பணி யாருக்கு என்பதில் குளறுபடி


பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


மாணவர் சேர்க்கை:

பி.எட்., படிப்பில் புதிய விதிமுறைகள் தொடர்பான குழப்பத்தால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
பி.எட்., படிப்பு எத்தனை ஆண்டு என்ற குழப்பம் தீர்க்கப்படாமலேயே, மாணவர் சேர்க்கை பணி துவங்கியுள்ளது. மத்திய அரசு அளித்த புதிய விதிமுறைகளையும், தமிழக அரசு எந்த திருத்தமும் இன்றி, அப்படியே வெளியிட்டு உள்ளது.இதன்படி, பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., முடித்தவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி


சென்னை : பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்., படிப்புக்கு அந்தந்த கல்லுாரிகளே மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு வர, இந்த ஆண்டு முதல் முறையாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட உள்ளது.

சமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு





பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு


பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது. 

மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது.இனிவரும் காலங்களில் பள்ளிகளில், மாணவர்களுக்கிடையே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து வருவாய் துறை, போலீஸ் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல் நன்றி - அனைத்து வளமைய பட்டதாரி சங்கம்.


அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

  அனைத்து வளமைய பட்டதாரி சங்கம் அறிவிப்பு

அதிர்ச்சியில் பொறுப்பு மேற்பார்வையாளர்கள்....6 வார காலத்திற்குள் பள்ளிக்கு இடம் மாற்ற கோர்ட் ஆணையா?

அதிர்ச்சியில் பொறுப்பு மேற்பார்வையாளர்கள்....6 வார காலத்திற்குள் பள்ளிக்கு இடம் மாற்ற கோர்ட் ஆணையா?

பொறுப்பு மேற்பார்வையாளர்களாக இருக்கும் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி செல்லவே விருப்பம் இல்லையாம். அனைவரு்க்கும் கல்வி இயக்கத்தில் பதவி சுகம் கண்டுவிட்டதாலும், பள்ளிக்கு சென்றால் பாடங்கள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தாலும் பல பேர் இதனை வெறுக்கின்றனராம்.
1. பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கு காம்போனன்ட் இல்லை.
2. பயிற்சிகளுக்கு செல்ல தேவையில்லை
3. பயிற்சிகள் கொடுக்கத்தேவையில்லை
4. இவர்களின் பள்ளி பார்வையை ஆய்வு செய்யவும் யாரும் இல்லை.

ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதிமாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றவிருக்கிறார்.

கடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்றுபள்ளி
வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார்இதனால்,மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது.இந்நிலையில்இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்துமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள்வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

BT TEACHER - DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] - REVISED

15 எஸ்.சி/எஸ்.டி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 



சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், " ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு தயாரித்து வழங்குவதில் உள்ள சிரமத்தினை குறைக்கும்
வகையில், நடப்பாண்டில் 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கும் என மொத்தம் 12 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 260 நீராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும். 

தமிழக கால்நடை துறையில் 1180 பணியிடங்கள்

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் 1180 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: தமிழக அரசுத் துறைகளில் ஒன்றான கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 1101 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 725 இடங்களும், கால்நடை ஆய்வாளர் பயிற்சிபணிக்கு 294 இடங்களும், அலுவலக உதவியாளர் பணிக்கு 36 இடங்களும், கதிரியக்கர் (ரேடியோகிராபர்) பணிக்கு 24 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பணிகளுக்கு 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு

சிவகங்கை : பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி


பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!

பெற்றோர் ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை யில், 14க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் மோசடி நடக்காமல் தடுக்க, மாணவ, மாணவியரின் ஆதார் எண்களைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.மாணவர்களிடம் ஆதார் எண் சேகரித்ததில், 70 லட்சம் பேருக்கு ஆதார் எண் இல்லை என்பது தெரிய வந்தது.
 
இதையடுத்து, மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் அட்டைக்கான பதிவு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, ஆதார் எண் இல்லாத மாணவர்களிடம், தாய் அல்லது தந்தையின் ஆதார் எண் மூலம், தகவல்களை பெற்று மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களிடம் பெற்றோரின் ஆதார் எண் வாங்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு


அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளில்...:
தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழில் மாணவர்களை வாசிக்க வைத்தால், தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி, தொடக்கப் பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு; நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழில் நன்றாக வாசிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு மாணவரையும் தமிழில் பிழையின்றி, நிறுத்தி வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பாடப்புத்தகங்கள், பத்திரிகை போன்றவற்றை மாணவர்கள் வாசிக்க வேண்டும். எழுத்துக்களின்நடைக்கேற்ப, குறியீடுகளுக்கு ஏற்றவாறு, நிறுத்தி, நிதானமாக வாசித்தாக வேண்டும்.
நுாலக வசதி:

வி.ஏ.ஓ., பதவிக்கு செப். 2 கலந்தாய்வு

சென்னை:'வி.ஏ.ஓ., பதவியில், 660 காலியிடங்களை நிரப்ப வரும், 2ம் தேதி துவங்கும் கலந்தாய்வு, 11ம் தேதி வரை நடக்கும்' என, -டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பு: முதல் கட்ட கலந்தாய்வில் அறிவிக்கப்பட்ட, 2,342 காலிஇடங்களில்,
1,682 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள, 660 இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 2 முதல், 11ம் தேதி வரை நடக்கும். இதற்கான தேர்வர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீடு போன்ற தகுதி அடிப்படையில், காலியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு


48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.7–வது சம்பள கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர், டெல்லியில் நேற்றுசெய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், ‘‘7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என கூறினார்.இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

பள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "எரிசக்தி சேமிப்பு" ஓவியப் போட்டி - முதல் பரிசு ரூ.20000/- வழிகாட்டுதல்கள் - இயக்குனர் செயல்முறைகள்



தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரசுப்பள்ளிகள்


தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை.ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதாளை, ரெட்டையூரணி, புதுமடம், பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம், சனவேலி, திருவாடானை, தொண்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், மங்களக்குடி, பாண்டுகுடி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இப்பணியிடங்களை நிரப்ப ஆக., 12ல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் ஆக., 14ல் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.

தமிழக பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்ப விருது


மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருதுக்கு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர், அடுத்த மாதம், 5ம் தேதி, ஜனாதிபதியிடம் விருது பெறுகிறார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 2010 முதல் ஆண்டுதோறும், தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை, தமிழகத்தில் இதுவரை, ஐந்து ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.கடந்த, 2014 - 15ம் ஆண்டிற்கான விருதுக்கு, தமிழகம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட், அரியானா, ம.பி., மற்றும் டில்லி மாநிலங்களின், ஒன்பது ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்: மே மாதத்துக்கு தள்ளிவைக்க கோரிக்கை


பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலை மே மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அந்த மனு விவரம்:-

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆகஸ்ட் 26 முதல் 29 வரை பணி நிரவல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக 37 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். உபரி ஆசிரியர்களைக் கணக்கெடுத்ததில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் இடையே முரண்பாடுகள் உள்ளன.

100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை: அ.க.இ.மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்

மாவட்டக் கல்வி அலுவலர் பதவி; நிரப்பப்படாத 75 பணியிடங்கள்: தலைமை ஆசிரியர்கள் புகார்

மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான 75 காலிப் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
 நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவில் 125 பணியிடங்களில் 65 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

 கிருஷ்ணகிரி, திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு பரமக்குடி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்பட மாவட்டக் கல்வி அலுவலர் அளவில் 65 இடங்களும் காலியாக உள்ளன.
 இந்தப் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளதாகவும், இவற்றை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றனர்.

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் மாணவர்கள் படைப்புகள் வெளியிட மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு


பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் வெளியிட மாணவர்கள் படைப்புகளை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பள்ளிகள் பின்பற்ற வேண்டிய மழைகால முன் எச்சரிக்கை நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்


டி.என்.பி.எஸ்.சி.,குருப்- || கலந்தாய்வு மாற்றம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28 அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014ல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதியில் நடைபெறும்.


இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 29ம் தேதி கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் அன்றே கலந்தாய்வு நடைபெறும்.

ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கை செப்டம்பர் 2015 இரண்டாவது வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

The Hindi daily Dainik Baskar quoted in its report published on 22.8.2015 about report of Seventh pay commission that the pay commission report will be submitted by second week of September 2015,According to its report the Seventh Pay Commission report to be submitted to the government will be examined by  the senior CoS, which will take two months.
Then it will be submitted to the Ministry of Finance, which will be  implemented from 1st  January, 2016,According to sources the fitment formula 2.86 would be recommended by 7th pay commission.

வராற்றுச் சுவடுகள்-அலெக்ஸôண்டர் பிளெமிங்.

இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.
இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.
ந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.

இப்படியும் ஒரு தலைமையாசிரியர்-

பள்ளி பராமரிப்புக்கும், மாணவர்கள் நலனுக்காகவும் அரசு ஒதுக்கும் நிதியை தன் குடும்ப செலவிற்கு பயன்னடுத்திக் கொண்டு வெற்று பில்களை கடையில் வாங்கி பொய் கணக்கெழுதும் பல தலைமையாசிரியர்கள் மத்தியில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை  மாணவர்கள் நலனுக்காக செலவிட்டு,பள்ளியை தன் வீடாகவும் மாணவர்களை தன் பிள்ளைகளாகவும் நினைத்து பணிபுரியும் இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

மதுரை மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி. வழக்கமாய் மாலை வகுப்புகள் முடிந்ததும், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும், அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் செல்கின்றனர்.
ஆனால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட் வயது 47.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அசத்திய ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

இன்றைய 'ஒரு வார்த்தை ஒரு இலட்சம்' விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அசத்திய கோவை,மூலத்துறை ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி,7ம் வகுப்பு மாணவர்கள் கோகுல், சுனில் குமார் பாராட்ட வார்த்தைகள் இல்லை. பதின்ம பள்ளிகளுக்கு மத்தியில், தங்களைவிட மூத்த மாணவர்கள் இடையில் மிகச் சிறப்பாக முதலிடம் பெற்று அரசு பள்ளிகளுக்கு பெருமை தேடித் தந்தனர்.பயிற்றுவித்த ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும் பல. பல சாதனைகள் படைத்து வரும் மூலத்துறை பள்ளி வாழ்க! வளர்க!தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் வளர்ந்து வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

கடும் போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மாறுதல். தகுதியான இடைநிலை ஆசிரியர் காலிபணியிடம் பட்டியல் ( 17 ).

ஆலங்குளம் ஒன்றியம்
1.மாவிலியூத்து.
2.தங்கம்மாள்புரம்.
3.கருப்பினான்குளம்.

குருவிகுளம் ஒன்றியம் .
4.ஓடைகாரன்பட்டி.
5.ஆராய்ச்சி பட்டி.
6.கணபதி பட்டி.
7.மேல நாலாந்தலா .

BT TO PG PANEL FOR ALL SUBJECTS AFTER ADDITION & DELETION-SELECTED CANDIDATES WILL BE INSTRUCTED TO ATTEND THE COUNSELLING ON 24.08.2015 @ 9.00 AM

15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த, 2013-14 முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக்குகளில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. கடந்த, 2011-12ல், 9 லட்சம் பேர்; 2012-13ல், 7 லட்சம் பேர்; 2013-14ல், 5 லட்சம் பேருக்கு,இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. கடந்த நிதியாண்டு, 6 லட்சம் பேருக்கும், நடப்பாண்டு, 6 லட்சம் பேருக்கும், இலவச லேப்டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

NTSE APPLICATION FORMAT

சட்டசபை:பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் 31-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவுசெய்வதற்காக, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. கொறடா சக்கரபாணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பீம்ராவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கூட்டம் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ப.தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

தொடக்கக்கல்வி - 4526 தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


மதுவிலக்கு ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வலியுறுத்தி உள்ளது.


14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 14 ஆயிரத்து 500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
15 ஆயிரம் ஆசிரியர்கள்:அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 4,000 நிரந்தர ஆசிரியர்கள்; 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதி தேர்வு நடத்தி, அதன்படி பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

கோவை:'மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும், வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில், அரசியல் கட்சிகள், நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்களுடன், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கமாகி விட்டது. போராட்டங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390 ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு, பல கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376 பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி முழுவதும் நடைமுறைப் படுத்தப்படுகிறதா?


மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் படைப்பாற்றல் கல்வியின் செயல்பாடுகள் குறித்து மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் உதவியுடன், 2008ல் படைப்பாற்றல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின், தனித்திறமையை கண்டறிந்து, அதில் முழு ஈடுபாட்டுடன், திறமை உடையவர்களாக மாற்ற வேண்டும்; பாடத் திட்ட முறைகள், அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கல்வி கற்றுதர வேண்டும், என தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

Regular B.Ed கடைசி வாய்ப்பு ?

B.Ed regular ல் ஓர் ஆண்டு படிப்பு இந்த ஆண்டு மட்டும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு.மற்ற மாநிலங்களில் B.Ed இரண்டு வருட படிப்பு சேர்கை
நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.
தமிழக அரசின் சிறப்பு அரசாணை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியீட. ஏற்ப்பாடு.

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்


மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களை நடத்துவதற்காக, இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களிடமிருந்து, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தால் மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டைப் பெற வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புகைச்சீட்டின் மொத்த எண்ணிக்கை விவரத்தை ஆகஸ்ட் 21-க்குள் பள்ளிகள் வாரியாக அளிக்க வேண்டும் என்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புதிது புதிதாக துவங்கும் மன்றங்கள் அறிவிப்புடன் 'அம்போ': ஆசிரியர்கள் அதிருப்தி.


பள்ளிகளில் துவக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மன்றங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் சூழலில், அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டத்தில், 'குமரபருவ மன்றம்', 'கலை பண்பாடு இலக்கிய மன்றம்' புதிதாக துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கு, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மன்றங்கள் துவங்கப்படுகின்றன. இவ்வாறு, துவங்கப்படும் மன்றங்கள், ஒன்று அல்லது, இரண்டு மாதங்கள் வரை செயல்படுகின்றன. காலப்போக்கில், தேர்ச்சி விகிதம் என்ற போர்வையில் அனைத்து மன்றங்களும் முடக்கப்படுகின்றன. சில பள்ளிகளில், ஒரு சில ஆசிரியர்களின் ஆர்வத்தின்படி,

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்-அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி.


பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாதந்தோறும், 1,250 ரூபாய் கல்வி உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த உதவித்தொகையைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனறித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். முதற்கட்டமாக மாநில அளவில், நவ., 8ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தேசிய அளவில் மே, 8ம் தேதி தேர்வு நடத்தப் படுகிறது. தமிழகத்தில், நவ., 8ம் தேதி நடக்கும் தேர்வினை எழுத விரும்புபவர்கள் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 50 ரூபாய் தேர்வுக் கட்டணத்துடன், தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

யாறுக்கும் நிகரானவரல்ல காமராஜர்- மெய்சிலிர்க்கும் உண்மைகள்

சு.பிரசாத் பெருந்துறை's photo.
சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்…
நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.

பள்ளிக்கல்வி - மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்