பீகார் மாநிலத்தில் அனிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 19 வருடங்களாக ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியராக பணிபுரிய டிசம்பர் 19ஆம் தேதி அரசு சார்பில் வேலை வாய்ப்பு கடிதம் வந்தது.
அவருக்கு ஜனவரி 1ஆம் தேதி பணியில் சேரும் படி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டிசம்பர் 30ஆம் தேதி அவருக்கு 60 வயது ஆகிவிட்டது. மேலும் இதன் காரணமாக அவர் பணியில் செய்வதற்கு முன்பாகவே ஓய்வு பெற்றுவிட்டார்.