Breaking News

TNSED Schools App இல் மீதமுள்ள விடுப்பு விபரங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்

 TNSED Schools App இல் மீதமுள்ள விடுப்பு விபரங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்.


2) UEL on MC எனப்படும் மருத்துவ விடுப்பு


தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.


0-2 yrs                0 day

2-5 yrs              90 days

5-10 yrs         180 days

10-15 yrs       270 days

15-20 yrs       360 days

above 20 yrs  540 days


ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.


உதாரணத்திற்கு ஓர் ஆசிரியர் 10 வருடங்கள் 2 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதிக் காலம், 180 அல்ல, 270 நாட்கள் ஆகும். இங்கே அவருக்கு 15 வருடங்கள் முடிந்தால் தான் 270 நாள்கள் ML என்று கணக்கிடுவது தவறு. 10 ஆண்டுகள் முடிந்தாலே 270 நாள்கள் தான். இந்த formula மேலேயுள்ள அனைத்து ஐந்தாண்டிற்கும் பொருந்தும்.


ML என்பது பணிபுரிந்த ஒரு வருடத்திற்கு 18 நாள் என்ற அளவில்  கணக்கிடவும்.


ஒரு வருடத்திற்குண்டான 12 நாள் CL ஐ அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே அதாவது முன்கூட்டியே,  தொடர்ச்சியாக 10 நாட்கள் எடுப்பதில்லையா? அதுபோல, 11 -வது ஆண்டு ஆரம்பித்த முதல் நாள் முதலே, 10-15 yrs க்கு உண்டான  270 நாட்களை (முன்பு எடுத்தது போக மீதமுள்ள நாட்களை) தற்போதைய Medical Rules படி இடைவெளி விட்டு எடுக்கலாம. ஒருவேளை விடுப்பு தீர்ந்து விட்டால், 15 ஆம் ஆண்டு முடியும் வரை ML எடுக்க முடியாது.


7) EOL on loss of pay without M.C.


மருத்துவச் சான்று அல்லாமல் எடுக்க அனுமதிக்கப்படும் ஊதியமில்லா விடுப்பு நாள்களின் எண்ணிக்கை 5 yrs க்கு மேல் 360. இதில் நீங்கள் எடுத்த விடுப்பைப் கழித்து மீதம் உள்ள விடுப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால்,  360 எனக் குறிப்பிட வேண்டும்


180 days if less than 5 years


360 days if more than 5 years


8) EOL On loss of pay with M.C.


மருத்துவச் சான்றின் பேரில் எடுக்கும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இதில் நீங்கள் எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், 0 எனக் குறிப்பிட வேண்டும்..


9)  UEL on Private Affairs


இதில் அனுமதிக்கப்படும் அரைச்சம்பள விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 10 yrs க்கு மேல் 180. இந்த எண்ணிக்கையில் நீங்கள் எடுத்த அரைச்சம்பள விடுப்பு நாட்களை கழித்து மீதமுள்ள எண்ணிக்கையை பதிவிட வேண்டும்..


90 days if less than 10 years


180 days if more than 10 years


10) Special Casual Leave


விடுமுறை நாளில் பணிசெய்து அதனால் விடுப்பு எடுத்திருந்தால், 10 லிருந்து கழித்து மீதியை பதிவிடவும். இல்லையென்றால், இதில் 10 எனக் குறிப்பிட வேண்டும்..


இங்கே கவனிக்கவும். Special CL இல்  0 அல்லது வேறு ஏதேனும் பதிவிடுங்கள் என்று பலரும், பல வழிமுறைகளை தங்களுக்கு தந்திருப்பார்கள். தவறில்லை, அனைவரது வழிமுறைகளையும் படித்துப் பாருங்கள், அவையனைத்திலிருந்தும் (lncluding Me) எந்த ஒன்றை சரியென தாங்கள் உணர்கிறீர்களே (உயர் அலுவலர்களின் ஒப்புதல்படி) அதனை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.


11) Special Disability Leave


இதில் விபத்து போன்ற காரணங்களினால் விடுப்பு எடுத்திருந்தால், 720 ல்  எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து குறிப்பிட வேண்டும்  எடுக்கவில்லை எனில் 720 எனக் குறிப்பிடவும்.


இங்கே கவனிக்கவும். 0 அல்லது வேறு ஏதேனும் ஒன்றை பதிவிடச் சொல்லியிருப்பார்கள். குழப்பம் வேண்டாம்.




TNSED Schools App இல் மீதமுள்ள விடுப்பு விபரங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்.👇👇👇


பெண் ஆசிரியர்களுக்கு..


3) Maternity Leave


ஒரு குழந்தை இருப்பவராக இருந்து விடுப்பை எடுத்திருந்தால், மீதமுள்ள நாள்கள் 365 எனப் பதிவிட வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்து விடுப்பை எடுத்திருந்தால், மீதமுள்ள நாட்கள் 0 எனப் பதிவிட வேண்டும். விடுப்பு எடுக்கவில்லையெனில் 730 என்று பதிவிடவும்.


4) Leave for Adoption of Child


அதிகபட்சம் 270 நாள்களில், நீங்கள் எடுத்தது போக மீதமுள்ளதை பதிவிடவும். விடுப்பு எடுக்கவில்லையெனில் 270 எனப் பதிவிட வேண்டும்..


5) Abortion Leave..


42 நாட்கள் உண்டு. விடுப்பு எடுத்த நாள்களை கழித்துக் கொண்டு மீதியை  பதிவிட வேண்டும். இல்லையெனில் முழுமையாக 42 என பதிவிடலாம்..


6)  Leave on still born child birth..


தற்போது குழந்தை பிறந்து மகப்பேறு விடுப்பில் இருந்தால் 90  நாள்களில் மகப்பேறு விடுப்பு துய்த்துள்ள நாட்களை கழித்துக் கொண்டு மீதமுள்ள நாட்களைப் பதிவிட வேண்டும்.  இல்லை எனில்  90 எனப் பதிவிட வேண்டும்..


Yearly Leave இல் வரிசை எண் 1, 2, 3 இருபாலருக்கும் பொதுவானவை..


Service Leave இல் வரிசை எண் 1, 2, 7, 8, 9, 10, 11 ஆகியவை இருபாலருக்கும் பொதுவானவை..


Service Leave இல் வரிசை எண் 3, 4, 5, 6 ஆகியவை பெண்களுக்கு மட்டும் உரியவை..


மேற்காணும் Empty படிவத்தில், மீத விடுப்பு விபரங்களை பூர்த்தி செய்து, உயர்மட்ட அலுவலர்களிடமோ அல்லது அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமோ காண்பித்து, சரி எனும் பட்சத்தில் App இல், மேற்காணும் வழிகளில் விபரங்களை உள்ளீடு செய்து


இறுதியாக,


Submit செய்ய வேண்டும். ஒரு முறை Submit செய்து விட்டால் மாற்ற இயலாது..


தலைமை ஆசிரியர்  ID வழியாக சென்று  Leave Sanction இல் Leave Balance இல் சென்று ஒரு முறை மாற்றம் செய்து கொள்ளலாம்.


தலைமை ஆசிரியர் Edit செய்த பிறகு அல்லது சரியாக இருக்கும் பட்சத்தில் Approve செய்ய வேண்டும் ..


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள், சரிபார்த்து Approve செய்வார்கள்.


இறுதியாக "Submit" கொடுத்தால், நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும், பிறகு நாம் விடுமுறைக்கு Apply செய்து கொள்ளலாம்.