Breaking News

ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு இல்லை : அரசு பள்ளி மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த தலைமை ஆசிரியர்.!

 

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர், பெண் ஆசிரியர்களை கேலி, கிண்டல் செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த புகாரை அளித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்துகொண்டு, பள்ளியின் பெண் ஆசிரியர்களை கேலி செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து பெண் ஆசிரியர்கள் தலைமை ஆசியரிடம் புகார் அளிக்கவே, திருத்தவே முடியாத அந்த மாணவர்கள் மீது, போலீசில் புகார் அளிப்பதுதான் ஒரே வழி என்று தலைமை ஆசிரியர் புகார் அளித்துள்ளார்.

அண்மைய காலமாக அரசு பள்ளி மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வகுப்பறையில் உள்ள டேபிள், சேர்களை அடித்து நொறுக்குவதும், ஆசிரியர்களை அவதூறாக, ஆபாசமாக பேசுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர்.

அரசு சார்பில் மாணவர்களுக்கு நன்னெறிகளை போதிக்கக்கூடிய வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இருந்தபோதிலும் மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற விதி இருப்பதால், மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர