Breaking News

ஆசிரியர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - அன்பில் மகேஸ்

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


ஆசிரியர்களின் 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளோம்.அரசு உதவி பெறும் பள்ளிகளும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.கோரிக்கைகளை தமிழக முதல்வர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.

செப்டம்பர் 27-ம் தேதி பிரதமரை சந்திக்க தமிழக முதல்வர் டெல்லி செல்கிறார். அப்போது பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியையும் கேட்க உள்ளோம்.டிட்டோ ஜாக் அமைப்பினர் தங்களது உரிமையை வெளிப்படுத்தினாலும், இந்த முறை தமிழக முதல்வருக்கு துணை நிற்போம், அவரது கரத்தை பலப்படுத்துவோம் என்றும், நலத்திட்ட உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தை ஒத்திவைத்தனர்.


மாணவர்களின். தமிழக முதல்வர் டில்லி வருகைக்கு பின், ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில், ஓரிரு கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்குள் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஆன எதிர்ப்பு குறித்த கேள்விக்கு, "அது ஒரு தனி நபரின் கருத்து.இது முதிர்ச்சியற்ற கருத்து என்று அவர்களின் தலைமை கூறியது.அதுபற்றி நாங்கள் கூறுவதற்கு ஒன்றுமில்லை.இவ்வாறு அமைச்சர் கூறினார்.