Breaking News

சிக்குகிறார்களா ஆசிரியர்கள்? தமிழக கல்வித்துறையின் அதிரடி உத்தரவால் கலக்கம்!

 இது ஆசிரியர்களின் கல்வி நிலை மற்றும் தகுதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது


தமிழக பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்து அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில், தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரங்களை தொகுத்து வழங்க வேண்டும். எனவே, இத்துடன் இணைக்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அவ்விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்து ஒன்றியம் வாரியாக தொகுத்து கையொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும். மேலும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக (தொடக்கக் கல்வி) இருக்கைப் பணியாளருடன் சென்னை-6 தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள நாளில் நேரில் வருகை புரிய தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி மாவட்டம்

* செப்டம்பர் 26ம் தேதி சென்னை,செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம். செய்யாறு, பொன்னேரி, இராணிப்பேட்டை திண்டிவனம், திருப்பத்தூர். திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், விருதாச்சலம், கள்ளக்குறிச்சி

* செப்டம்பர் 27ம் தேதி அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, அரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர்.பட்டுக்கோட்டை, திருச்சி, முசிறி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, கிருஷ்ணகிரி, ஓசூர்.

* செப்டம்பர் 30ம் தேதி சிவகங்கை, தேவகோட்டை, மதுரை, திருமங்கலம், பரமக்குடி, இராமநாதபுரம், சேலம், தாரமங்கலம், நாமக்கல், தேனி, திருப்பூர், தாராபுரம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர்.

* அக்டோபர் 1ம் தேதி கோவை, ஈரோடு, கோபி, கன்னியாகுமரி, கோவில்பட்டி, பொள்ளாச்சி, சிவகாசி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நீலகிரி, திருநெல்வேலி, வள்ளியூர்.


இதன் மூலம், ஆசிரியர்களின் கல்வி நிலை, தகுதி மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்தி பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன. இது, பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களின் பணிநிலை மற்றும் கல்வி பின்விளைவுகளை ஆராய்வதற்கான ஒரு படி என கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, பி.எட்., கல்வித் தகுதி இல்லாமல் பி.லிட் கல்வித் தகுதியுடன் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்களையும் உடனே அனுப்புவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு விவரங்களை பதிவு செய்வதன் மூலம், கல்வி தரத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்தவும், துறை அடிப்படையில் செயல்திறனை அளவீடு செய்யவும் செய்யப்படும் நடவடிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்தல் கிடைக்கும்.

இதன் மூலம், முன்னணி கல்வியாளர்களின் வேலை நிலையை உறுதிப்படுத்தலாம். மேலும் இது கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும். அதற்கு மேலாக, கல்வி முறைப்பாடுகளை உறுதிப்படுத்த, பத்தாண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்களும் கேட்கப்படுகிறது. இது, கல்வியில் உறுதியான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.