டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்..
இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II.இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 08:2024, நாள் 20.08.2024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல் (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.
தேர்வு கடினம்: இந்த தேர்வு முக்கியமான சில விஷயங்களை கற்றுக்கொடுத்து உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்.. இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.
1. இந்த முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கேள்விகள் பள்ளி பாட புத்தகங்களில் இருந்து மட்டும் கேட்கப்படவில்லை. அதற்குள் வெளியில் இருந்தும் அதிகம் கேட்கப்பட்டன.
2. யுபிஎஸ்சி தேர்வு போல பெரும்பாலான கேள்விகள் முழுக்க முழுக்க வெளியில் இருந்து கேட்கப்பட்டன.
6. அதெல்லாம் போக நிகழ்காலத்தில் இருக்கும் பொது அறிவு தொடர்பான ஆழமான கேள்விகளும் கேட்கப்பட்டன.
7. இனிமேல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 படிப்பவர்கள்.. இப்போது படிக்கும் முறையை மாற்றி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு படிப்பது போல படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக அமைந்துள்ளது. போட்டி உச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.