▪️நீங்கள் festival advance form அலுவலகத்தில் கொடுத்திருந்தாலும் mobile app-யில் apply செய்பவர்களுக்கு மட்டுமே விழா முன் பணம் கிடைக்கும் என தகவல்...
Breaking News
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - கடலூர் மாவட்ட CEO
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.28 முதல் அக்.6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
ஆசிரியர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - அன்பில் மகேஸ்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிக்குகிறார்களா ஆசிரியர்கள்? தமிழக கல்வித்துறையின் அதிரடி உத்தரவால் கலக்கம்!
இது ஆசிரியர்களின் கல்வி நிலை மற்றும் தகுதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது
மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம்பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் போஸ்டிங்
பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து சென்னையில் தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அடிப்படை காரணமின்றி மேற்கொள்ளப்படும் பணிமாறுதல் நடவடிக்கைகளை கண்டித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் வளைகாப்பு ரீல்ஸ்- ஆசிரியை மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கயை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டம் கூட்டமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் பிட் அடித்த மாணவிகள் - கண்டித்த ஆசிரியர்கள் - விபரீத முடிவால் அதிர்ச்சி – நடந்தது என்ன
கோவில்பட்டி அருகே தேர்வில் பார்த்து எழுதியதை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து கொசு மருந்து லிக்யூட் குடித்த நான்கு மாணவிகள் – கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எமிஸ் தளத்தின் பணிச் சுமைகளால் தவிக்கும் ஆசிரியர்கள்: தொடக்க கல்வித் துறை மாற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தொடக்கப் பள்ளிகளில் அலுவல் பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசிரியரை VRS வாங்கிட்டு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுரை - ஆசிரியை அதிர்ச்சி
காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாத ஆசிரியரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளிகளில் உயர் அதிகாரிகள் தலைமையில் "திடீர் ஆய்வு" நடத்த முடிவு
அரசு பள்ளிகளில் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
வேலூர்: பள்ளிச் சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு... வைரலான வீடியோ.. அரசுப்பள்ளியில் அதிர்ச்சி! ரீல்ஸ் மோகத்தில் மாணவிகள் அலப்பறை
வேலூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவிகள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பள்ளியின் மேல்தளத்துக்குச் சென்று ஒரு மாணவிக்கு `வளைகாப்பு' நிகழ்ச்சி நடத்துவதைபோல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.
முதன்மை கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டம்
சிரியைகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஒருமையில் திட்டியதால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மோசடி புகார் வட்டார கல்வி அலுவலர் கைது ரூ.12 கோடி மோசடி-
தருமபுரி தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி வசூலித்து மோசடி செய்த புகாரில் வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் திட்டியதால் குழந்தைகள் நல அமைப்பில் பெற்றோர் புகார் - ஆசிரியை தற்கொலை முயற்சி - தலைமையாசிரியா் "பணியிடை நீக்கம்"
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தவா் தண்ணாயிரமூா்த்தி. இவா் மீது மாணவா்களிடம் பணம் வசூலித்தது, இவா் திட்டியதால் ஆசிரியை தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் AI பாடத்திட்டம். அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்.!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சூப்பரான செய்தியை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத்தை முழுமையாக கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மீன் மாதிரி துள்ள வச்சிட்டாங்க.. காலம் மாறிப்போச்சு.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுதியவர்களுக்கு ஷாக்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்..
இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த பட்டியல் தயார் செய்கிறது கல்வித்துறை
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை கலைதல், ஊக்க ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டுமென மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளியில் கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள் - பதறிய ஆசிரியர்கள் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஒரு பக்கம் போராட்டத்தில் ஆசிரியர்கள்
மறுபக்கம் 5 மாணவர்கள் செய்த சம்பவம்
ஒரு மாவட்டத்தையே உலுக்கிய பயங்கரம்
உயிரை பிடித்து பதறிய ஆசிரியர்கள்
மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவி - ஆசிரியர்கள் அதிர்ச்சி
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்.
மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தமிழக அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நாளை முதல் நடைபெறக்கூடிய ICT TRAINING செல்வதற்கு முன்னால் TNTP வலைதளத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய எட்டு வீடியோக்களை TNSCERT பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோக்களின் விவரம் பின்வருமாறு
1. Hi-Tech lab functionalities
2. Tux typing
3. Google Drive
4. Tamil typing
5. Poster creation
6. Libra impress
7. Artificial intelligence
8. Mannarkeni
வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!
வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!
இந்தியாவில் வசிப்பவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்த பிறகு வருமான வரித்துறை அவற்றை சரி பார்க்கும்.
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்
1. பள்ளி வளாகத்தினுள் எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது.
2. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கூட வகுப்பறைகளில் மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்க கூடாது.
ஆசிரியா்கள் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை: தமிழக அரசு
ஆசிரியா்களின் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் போக, மீதமுள்ள கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னையில் அரசுப் பள்ளிக் கூடத்தில் ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் நிகழ்த்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி ஒன்றில் பிரபல ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவும், அதன் நிமித்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
டிட்டோஜாக் உடன் ( 6.9.2024 ) ஆலோசனை நடத்த தொடக்கக் கல்வித்துறை அழைப்பு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோஜாக் ) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.09.2024 அன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய நாட்களில் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளமையால் . நாளை 06.09.2024 அன்று 11.00 மணி அளவில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநருடன் நடைப்பெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் .
தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா
செப்-5. சிதம்பரம் அருகே தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் திரு அசோக் விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். உதவி தலைமையாசிரியர் திரு ரவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் திரு ஜெயவேல் அனைவரையும் வரவேற்றார். விழாவில் தலைமையாசிரியர்
மாணவர்களுக்கு வழங்கிய உதவித்தொகை நிதியில் கையாடல்... பழநியில் பள்ளி ஆசிரியை கைது
பழநி: பழநி நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் உதவித்தொகைக்கான நிதியில் கையாடல் செய்த பெண் ஆசிரியரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சின்னக்கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயா, ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
அக்.19-ல் தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு- செப் 5 முதல் பதிவு தொடக்கம்
கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
புயலாக கிளம்பிய "பழைய ஓய்வூதியம்".. அதிகாரிகளுக்கு போன முக்கிய உத்தரவு..தலைமைச் செயலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: திமுக அரசுக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் தலைமைச் செயலகம் சங்கத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்திஅரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நீண்ட வருடங்களாகப் போராடி வருகின்றனர். திமுகவும், "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துவோம் " என்று தங்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள், Today School Morning Prayer Activities - 03.09.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2024
திருக்குறள்:
பால்,: பொருட்பால்
அதிகாரம்: இடுக்கண் அழியாமை
குறள் எண்:625
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.
பொருள் : விடாமல் மேன்மேலும் துன்பம் வந்த போதிலும் கலங்காமலி ருக்கும் ஆற்றலு டையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு்ப் போகும்.
பழமொழி :
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
Strike while the iron is hot.
TNSED SCHOOLS APP-ல் நுழை , நட , ஓடு , பற புத்தகங்களை Update செய்யவும்
தங்கள் வகுப்பு மாணவர்கள் முதல் பருவத்தில் ஒவ்வொருவரும் வாசிப்பு இயக்கம் சார்ந்து
🔅 நுழை
🔅 நட
🔅 ஓடு
🔅 பற
*ஆகியவற்றில் எந்த நிலையில் உள்ளார் என்பதையும் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையும்..படிக்க விரும்பும் 3 புத்தகங்களையும் தேர்வு செய்து Update செய்ய வேண்டும்
ஆசிரியர்களுடன் மோதல் - தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்"
இவர்களுக்காக ஒரு தலைமை ஆசிரியர், 11 ஆசிரியர்கள் உள்ளனர். தலைமை ஆசிரியராக அந்தோணி ராஜ் உள்ளார். பணியில் சேர்ந்த நாள் முதல் தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜூக்கும், ஒரு சில ஆசிரியர்களுக்கும் கல்வி தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.